வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 04.08.25

வாசகர் கடிதம் (பி.வெங்கடாசலபதி) 04.08.25

 


எங்கள் வீட்டில் நடந்த ஒரு சுவாரஸ்யமான அனுபவம்:


நேற்று எங்கள் உறவினர் பொள்ளாச்சியில் இருந்து வந்திருந்தார்.

மதிய உணவு சாப்பிட்டதும் மனந்திறந்து ஹாய்யாக உரையாடிக் கொண்டிருந்தோம்.

அப்போது நான் நமது இ பேப்பர் பற்றி பேசினேன்.

'அப்படியா...காட்டுங்க 

பார்க்கலாம் ' என்றார் ஆர்வமாக...

உடனே வாட்ஸ் அப் ஓப்பன் பண்ணி காட்டினேன்.

வேகமாக வாங்கி ஒவ்வொரு பக்கமாக 

கூர்ந்து பார்த்தார்.


இடை இடையே என் பிரிய கமெண்ட்டுகளையும் 

எடுத்து விட்டேன்.

மனம் மகிழ்ந்து இனிமை முகம் காட்டினார். உங்களை இந்த வாட்ஸ் அப் குரூப்ல இணைத்து விடுகிறேன்.

தினசரி அதிகாலையிலேயே நீங்க நியூஸ் எல்லாத்தையும் படிச்சிக்கலாம் என்று நான் சொன்னதற்கு டபுள் ஓகே யாக முகம் கனிந்தார்.


அடுத்து தெய்வம் இதழ் பற்றியும் எடுத்துரைத்தேன்.

மீண்டும் ஒரு அப்படியா சொல்லி ஆச்சரிய ஆனந்தத்தை 

வெளிப்படுத்தினார்.

சுமார் முக்கால் மணி நேரம் இந்த தளத்திலேயே நேரம் ஓடியது. கண நேரம் நிசப்தம். திடீரென்று அவருடைய செல்போனை என்னிடம் நீட்டினார்.

ஆர்வமுடன் என்ன என்று உற்றுப் பார்த்தால் , தமிழ் நாடு இ பேப்பர் பிடிஎஃப்..


என் அதிர்ச்சியைப் புரிந்து கொண்டவராய் 

முந்திக் கொண்டு வாய் திறந்தார்.


" நான் இரண்டு வருஷத்துக்கு முன்னாடி இருந்தே தமிழ் நாடு இ பேப்பரின் வாசகன்..

அது மட்டுமல்ல...

இதுவரை 400 பேர்களை சேர்த்து விட்டிருக்கேன். உங்களைத் தான் எப்படியோ மிஸ் பண்ணியிருக்கேன் என்று கூலாக சொன்னவர் 

இன்னொன்றையும் சுட்டிக் காட்டத் தவற வில்லை.


சமீப காலமாக வாசகர் கடிதத்தில் உங்களைப் பார்த்து வருகிறேன்.

மிக்க மகிழ்ச்சி...

தொடர்ந்து எழுதி வாருங்கள்...'

எனக்கு டிப்ஸ் கொடுக்க, என்னை விட பக்கத்தில் நின்று கொண்டிருந்த மனைவிக்கு கூடுதல் திருப்தி புன்னகை.

பாடம் உணர்ந்த தெம்பில் ஆர்வத்தை மட்டுப் படுத்திக் கொண்டே, அமைதி ஆனேன்.( ஆனந்தமும் தான்)


நமது வருமானம் குறைவாக இருக்கலாம்.நமது

உடல் ஆரோக்கியத்திற்கு

மிகச்சிறந்த உணவை 

நம்மால் உண்ண முடியும் ' என்ற நீண்ட தலைப்பிலான கட்டுரை வெகு வெகு ஜோர்.மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் விட்டு வைப்பேனா, என்ன...

இநத மேட்டரை பத்து காப்பி பிரிண்ட் எடுத்து

வைத்து விட்டேன்.

வீட்டின் ஹாலில் பிரேம் போட்டு வைத்து விட வேண்டும் என்று திட்டம்.


'ஆணவம் வாழ விடாது 

அனுபவம் வீழ விடாது '

சிந்திக்க ஒரு நொடி 

வாசகம் சிறப்பு.


உயிருக்கு நிலையாக புகுந்திருக்கும் வீடு இது வரையில் அமைய வில்லை என்ற கருத்தை உள்ளடக்கிய 340-- வது 

திருக்குறளை மனனம் செய்து சுதாரித்துக் கொண்டேன்!


நலம் தரும் மருத்துவம்,

தினம் ஒரு தலைவர்கள் 

கவிதைப் பக்கங்கள் 

கதைப் பக்கங்கள் 

வட்டார செய்திகள் அனைத்தும் அற்புதம் 

அற்புதம்.


தமிழ் நாடு இ பேப்பர் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டுவாழிய வாழியவே!



பி.வெங்கடாசலபதி

தென்காசி

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%