தமிழ் நாடு இ பேப்பரின் வாசக நட்புகளுக்கும் ஆசிரியர் குழுவினருக்கும் அன்பான வணக்கத்துடன் தொடங்குகிறேன்.
பொட்டல் புதூர் வாசகர் நெல்லை குரலோனின் கடிதம் படித்த பாதிப்பில் இருந்து இன்னும் நான் மீளவில்லை என்பதை மனப்பூர்வமாக ஒப்புக் கொள்கிறேன்.
தமிழ் நாடு இ பேப்பர் வளர்ச்சியின் மீது அவர் கொண்டுள்ள அன்பும் அக்கறையும் மிகவும் கவனிக்கத் தக்கது. இன்றைய பத்திரிகை துறை சூழலில் தமிழ் நாடு இ பேப்பரின் வருகை என்பது சற்று யோசித்தால் மிகவும் முக்கியமானது.
நித்தம் 20 பிளஸ் 4
பக்கங்களை செதுக்கிய சிற்பமாக கொண்டு வருவது என்பது அவ்வளவு எளிதானது இல்லை.
படைப்பாளர்களுக்கோ
பழம் நழுவி பாலில் விழுந்த அதிர்ஷ்டம்.
தாங்கள் நினைத்ததை எழுதி லட்சக்கணக்கான வாசக உள்ளங்களை கொள்ளை கொள்வது என்பது எவ்வளவு பெரிய வரப்பிரசாதம்.
இதையெல்லாம் அந்த வாசகர் கூறியது போல் யோசித்து பார்க்க வேண்டும்.
எழுதுவது படிப்பது என்று இருந்து விடாமல் இந்த சந்தர்ப்பத்தை நாம் அனைவரும் நல்ல முறையில் பயன் படுத்திக் கொள்ள வேண்டும்.
என்னைக் கேட்டால் முதலில் தமிழ் நாடு இ பேப்பர் குழுமத்தில் இருந்து புதிதாக வெளி வந்திருக்கும்
மாதமிருமுறை அச்சு இதழான தெய்வம் பத்திரிகைக்கு நாம் அனைவரும் தவறாமல் சந்தாதாரராக ஆக வேண்டும்.
இத்தோடு நில்லாமல்
நம் நட்பு -- உறவு வட்டாரத்தில் எடுத்து சொல்லி அவர்களையும் இணைத்து விட வேண்டும். இதை ஒரு சமூகக் கடமையாக செய்யத் தொடங்கினால் நமக்கு ஆத்ம சக்தி நிச்சயம் அதிகரிக்கும்.
மனப் பூர்வமாக நான் சொல்லும் இந்த கருத்துக்களை வாசக சொந்தங்கள் அன்பு உணர்வோடு பரிசீலனை செய்து
ஆக்கப்பூர்வமான செயல்களுக்கு தயக்கம் எதுவும் இல்லாமல் தாராளமாக முன் வர வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்.
பாகிஸ்தானுடனான போர் நடவடிக்கைகளை
நிறுத்தியது ஏன்?
மக்களவையில்
ராணுவ அமைச்சர் விளக்கம்.
அதிபர் டிரம்ப்பிடம் பிரதமர் மோடி பேசவில்லை.
நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்
இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தம் மீண்டும் கூறியுள்ளார்
டிரம்ப்.
இதை யெல்லாம் படிக்கும் போது நினைவுக்கு வருவது இது தான்...
மழை நின்ற பிறகும் தூவானம் நின்ற பாடில்லை.
இங்கே எதிர்க் கட்சிகள் எல்லாம் சேர்ந்து கொண்டு
பார்லிமென்ட்டின் பொன்னான நேரத்தை சீர் குலைத்து வருகின்றன.
அமெரிக்காவில் இருந்து கொண்டு
டிரம்ப் தன் தளபதிகளோடு சேர்ந்து நின்று, நான் தான் போரை நிறுத்தினேன் என்று சின்னப் பையன் மாதிரி மீண்டும் மீண்டும் சொல்லி
அரசியல் நாகரீகத்தை அசிங்கப் படுத்தி வருகிறார்.
வெட்கமாக இருக்கிறது.
வேதனையாக இருக்கிறது.
உலகளவில் பேசப்படும் தலைவர்கள் என்று சொல்விக் கொள்பவர்கள் கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல்
நடந்து கொள்வதை
கண்டிக்க...தண்டிக்க
கடவுள் தான் கீழே இறங்கி வர வேண்டும்.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் சர்க்கரை நோயாளிகள் பயப்படத் தேவையில்லை என்ற
தலைப்பில் வெளியாகி இருந்த அனைத்தும் மிகவும் பயனுள்ளது.
சினிமா செய்திகள்,
வட்டார செய்திகள்
எல்லாம் சிறப்பு.
கவிதை பக்கங்கள்
களிப்பு தரும் கற்கண்டாய் தித்தித்து
சுவை கூட்டுகின்றன.
மொத்தத்தில் சபாஷ் சபாஷ் சபாஷ்!
பி.வெங்கடாசலபதி
தென்காசி