வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 01.08.25

வாசகர் கடிதம் (வெ.ஆசைத்தம்பி) 01.08.25


2026 தேர்தல் நெருங்க நெருங்க அரசியல் சதுரங்க விளையாட்டுகள் ஆரம்பமாகிவிட்டது. ஓபிஎஸ் 

முதல்வர் ஸ்டாலினை தனது மகனுடன் சந்தித்து இருக்கிறார். 


தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த்தும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்திருக்கிறார். 


இந்த சந்திப்புகள் மரியாதை நிமித்தம் மேற்கொண்டவை என்று கூறினாலும் அதில் எதிர்கால திட்டங்கள் பொதிந்து கிடப்பதை மறுக்க முடியாது.


தமிழக அரசு பள்ளிகளில் நாலு லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள் என்று செய்தி அரசு பள்ளிகள் முக்கியத்துவம் பெற்று வருவதை உணர்த்துகிறது, 


தனியார் பள்ளிகளின் வரம்பற்ற பண வேட்டையும்,

அரசு பள்ளிகளில் படித்தால் அதனால் கிடைக்கும் சலுகைகளும் இதற்கு காரணம். மொத்தத்தில் அரசு பள்ளிகளின் கற்பித்தல் திறன் ஓங்கி இருப்பதையே இது காட்டுகிறது,


நாடு முழுவதும் சாலையில் திரியும் நாய்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு கொண்டே இருக்கிறது. அதிலும் வெறிநாய் கடித்து

அதன் காரணமாக ரேபிஸ் நோய் ஏற்பட்டு மரணம் அடைவோர் எண்ணிக்கையும் கூடி வருகிறது.


ஆனால் அரசோ நாய்களை தேசிய விலங்குக்கு இணையாக பெருமைப்படுத்துகிறது. 

ரேபிஸ் வந்த நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும் அதை  கால்நடை மருத்துவர் ஒருவர் தான் செய்ய வேண்டும் என்றும் சட்டத்தில் ஒரு ஷரத்து இருக்கிறது.


வெறிபிடித்த நாயை எப்படி பிடிப்பது ? அதைப் பிடிப்பவருக்கு ஆபத்து ஏற்படாதா ? என்ற கேள்விகளுக்கு பதில் இல்லை.


தெரு நாய்களை பிடிப்பார்களாம் ! அதற்கு தடுப்பூசி போடுவார்களாம் ! அதன் பிறகு அதன் உடலில் சிப்ஸ் பொருத்தி அதன் நடமாட்டத்தை கவனிப்பார்களாம் !

அரிய விலங்குகளின் நடமாட்டத்தைத் தான் இப்படி கண்காணிப்பார்கள்.


இந்த நாட்டில் நாய்களின் உயிருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் மனித உயிர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை

என்பதையே இது காட்டுகிறது.


கர்நாடக மாநிலத்தில் போலி வழக்கறிஞர்கள் பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது. போலியான சான்றிதழ்களை கொடுத்து வழக்கறிஞர்களாக பதிவு செய்ய முயலும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன என்று கூறுகிறார்கள்.


ஒட்டு மொத்த நாட்டில் பதிவு செய்திருக்கும் வழக்கறிஞர்களில் 20% பேருடைய சான்றிதழ்கள் போலியானவை என்று அறிவித்திருக்கிறார்கள்,


நீதித்துறைக்கே தண்ணி காட்டும் இந்த போலிகள் மகா கில்லாடிகள் என்பதை

ஒத்துக்கொண்டே ஆக வேண்டும்.


வெ.ஆசைத்தம்பி 

தஞ்சாவூர்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News