சீர்காழி ஆர்.சீதாராமன் எழுதிய " விலகிய அச்சம்" முதலில் மீனவனான குமாரை திருமணம் செய்யத் தயங்கிய ராணி தொலைக்காட்சியில் விபத்து செய்திகளைப் பார்த்து எந்தத் துறையில் இருந்தாலும் மரணம் நிச்சயம் என உணர்ந்து மனம் மாறி சம்மதித்ததாகப் படித்ததும் 2 விஷயங்கள் நினைவிற்கு வந்தன.
1. ஆனந்த ராகம் படத்தில் இடம் பெற்ற, " கடலோரம் கடலோரம் அலைகள் ஓடி விளையாடும், அம்மா கடலம்மா " பாடல்
2. ஆழிப்பேரலை நிறைய உயிர்களை வாங்கிய போது,
"எத்தனை முறை காலில் விழுந்தாலும் உன்னை ஒரு போதும் மன்னிக்க மாட்டேன்" எனும் அலையைப் பற்றிய கவிதை.
ரஜினி சூப்பர் ஸ்டார் என "பைரவி " படத்தில் நடிக்கும் போதே அவர் மறுத்தும் நாளிதழில் விளம்பரம் செய்த கலைப்புலி தாணு. செய்யும் தொழிலில் ரஜினிக்கு இருக்கும் அர்ப்பணிப்பு. ஒரு நிகழ்ச்சியில், "அதிகம் டை" அடித்தே தன் தலைமுடி வீணானதையும் குறிப்பிட்ட வெளிப்படையான பேச்சு எல்லாமே அவர் " சூப்பர் ஸ்டார்" ஆக காரணம்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?