
இறையன்பு அவர்களின் " வனநாயகம் "நூலை கவிஞர் இரா.ரவி அழகுற விமர்சித்துள்ளார்.
அதில் என்னைக் கவர்ந்த சில பகுதிகள்:
"மரங்கள் இயற்கையின் சாசனம், காற்றின் வாகனம் மலரின் ஆசனம், இனிமையின் பாசனம், பாதசாரிகளுக்கு நிழற்குடை, பயணிகளுக்குப் பஞ்சு மெத்தை, பறவைகளுக்கு சரணாலயம், வியாபாரிகளுக்குக் கூடாரம் , கால்நடைகளுக்கு
பயணியர் விடுதி " என்ற கவித்துவமான வரிகள்.
"தமிழக யானைகளுக்கு எல்லையே கிடையாது அவை வங்காளம் வரை செல்லக் கூடியது. எடுத்த எடுப்பிலேயே மணிக்கு 40 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது".
"புலி பசி எடுக்காது மானை விரட்டாது, புசித்து விட்டால் மானே அருகில் வந்தாலும் தொடாது".
பித்தப்பை கற்கள் உள்ளவர்கள் ஏலக்காய் தேநீரைத் தவிர்க்க வேண்டும் என நலம் தரும் மருத்துவம் மூலம் அறிந்தேன்.
ஸ்ரீகாந்த்
திருச்சி
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?