வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

வானிலை முன்னெச்சரிக்கை: தமிழகத்தில் 3 நாட்கள் கனமழை  2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை



சென்னை: தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ‘இன்று தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, காலை 8:30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு -வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மதியம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் வடதமிழக - புதுவை -தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இது அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேலும் மேற்கு வட மேற்கு திசையில் வடதமிழக புதுவை தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து மேலும் வலுவடைய கூடும்.


நேற்று முன்தினம் தென்மேற்கு அரபிக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று அதே பகுதிகளில் நிலவுகிறது இது மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலாக வலுப்பெறக்கூடும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

 

இன்று ( அக்டோபர் 22) விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், சேலம், திருச்சி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.


அக்டோபர் 23-ம் தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.


24-ம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கன மழையும் பெய்ய வாய்ப்புள்ளது. அக்டோபர் 25 முதல் 27-ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்


சென்னையை பொருத்தவரை இன்று மற்றும் நாளை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதேபோல சென்னையில் இன்று மற்றும் நாளை நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது



2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனமழை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் இன்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கனமழை காரணமாக புதுச்சேரியில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%