
புதுடெல்லி,
விண்வெளியில் அவ்வபோது சில அதிசய நிகழ்வுகள் நடப்பதுண்டு, அதேபோல் இந்த வாரம் 2 வால் நட்சத்திரங்கள் வானத்தில் தோன்ற இருக்கின்றன. ஸ்வான் மற்றும் லெம்மன் என்று பெயரிடப்பட்டுள்ள 2 வால் நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வர உள்ளன.
கடந்த வாரம் உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள தயாரா புக்யால் மலையேற்றப்பாதையில் வானவியல் ஆய்வாளர்களால் இந்த வால் நட்சத்திரங்கள் படம் பிடிக்கப்பட்டன. ஸ்வான் நட்சத்திரம் பிரகாசமானது தான் என்றாலும், அதை விடவும் லெம்மன் நட்சத்திரம் கூடுதல் பிரகாசமானது.
20 ஆயிரம் ஆண்டுகள் கழித்தே ஸ்வான் நட்சத்திரம் வானத்தில் தோன்றும். 3175-ம் ஆண்டில் தான் மீண்டும் லெம்மன் நட்சத்திரத்தை பார்க்க முடியும். 2 நட்டசத்திரங்களும் பூமிக்கு மிக அருகில் தோன்றின. ஸ்வான் நேற்று முன் தினமும், லெம்மன் நேற்றும் வானத்தில் பிரகாசித்தது.
பெரும்பாலான வால் நட்சத்திரங்களை தொலை நோக்கிகள் வழியாகவே பார்க்க முடியும் ஆனால் தூசிபடிந்த பனி பந்து போல் இருக்கும் 2 வால் நட்சத்திரங்களையும் வெறும் கண்களால் பார்க்கும் அளவிற்கு இந்த வாரத்தில் 2 நட்சத்திரமும் நல்ல பிரகாசமாக தெரியும்.
சூரியன் மறைந்த பிறகு இரவு 7 மணிக்கு தோன்றி 7.45 மணிக்கு மறைந்து விடும். இந்த லெம்மன் நட்சத்திரத்தை 3-4 மணி நேர இடைவெளியில் பார்த்து ரசிக்கலாம். இந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த லெம்மன் நட்சத்திரமும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்வான் நட்சத்திரமும் உக்ரேனிய வானவியல் ஆய்வாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. ஒரே வாரத்தில் தோன்றும் இந்த 2 வால் நட்சத்திரத்தை பார்க்க வானவியல் ஆர்வலர்கள் ஆர்வமாக உள்ளனர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?