விஜயகாந்த் பிறந்த நாளில் ஏழைகளுக்கு தள்ளுவண்டி, இஸ்திரிப்பெட்டி, தையல் யந்திரம்: பிரேமலதா வழங்கினார்

விஜயகாந்த் பிறந்த நாளில் ஏழைகளுக்கு தள்ளுவண்டி, இஸ்திரிப்பெட்டி, தையல் யந்திரம்: பிரேமலதா வழங்கினார்

சென்னை, ஆக 25–


தேசிய முற்போக்கு திராவிட கழக (தேமுதிக) நிறுவனத்தலைவர் விஜயகாந்த்தின் பிறந்த நாளான இன்றைய தினத்தை (25–ந் தேதி) "வறுமை ஒழிப்பு தினமாக" கட்சி கடைப்பிடித்து வருகிறது.


இந்த வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நேற்று (24–ந் தேதி) பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பல்வேறு நலத்திட்ட உதவிகளான சுயதொழில் செய்ய தள்ளுவண்டி, இஸ்திரி பெட்டி, தையல் இயந்திரம், இட்லி குண்டான் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர நாற்காலி போன்றவைகளை வழங்கினார்கள்.


மேலும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையும், அதேபோல் ராமாபுரம் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல, மதிய உணவு மற்றும் நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் இந்த ஆண்டும் வழங்கப்பட்டது. மேலும் புதுடெல்லியில் உள்ள டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு ஏழை மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவியாக 1 லட்சம் காசோலை வழங்கப்பட்டது.


வறுமை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை கழகத்தில் (கேப்டன் ஆலயம்) இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்ற கொள்கைப்படி பல்வேறு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரத்ததான முகாம் மற்றும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.


இந்நிகழ்ச்சியில் கழக அவைத்தலைவர் வி.இளங்கோவன், கழக பொருளாளர் எல்.கே.சுதீஷ், இளைஞர் அணி செயலாளர் வி.விஜய் பிரபாகர், கழக தலைமை நிலையச் செயலாளர் ப.பார்த்தசாரதி, கொள்கை பரப்பு செயலாளர் ஆர்.மோகன்ராஜ், துணைச் செயலாளர்கள் எம்.ஆர்.பன்னீர்செல்வம், சந்திரன், சுபா ரவி மற்றும் கழக சார்பு அணி நிர்வாகிகள், மாவட்ட கழக செயலாளர்கள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%