விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவுகள் எச்சரிக்கையாக இருக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்
Sep 03 2025
14

சென்னை:
விதிமீறல் கட்டிடங்கள் தொடர்பான உத்தரவு களை பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் மாநக ராட்சி அதிகாரிகளை எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலத்திற்கு உட்பட்ட விருகம்பாக்கம் பகுதியில் கட்டப்பட்ட விதிமீறல் கட்டிடத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அப்பகுதியைச் சேர்ந்த பி.தாமஸ் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பல்வேறு உத்தரவுகளை நீதிமன்றம் பிறப்பித்தும், வெவ்வேறு கார ணங்களை கூறி அவற்றை நிறைவேற்ற தவறியதாக சென்னை மாநகராட்சி ஆணையர், கோடம்பாக்கம் மண்டலத் திற்குட்பட்ட அதிகாரிகள் ஆகியோருக்கு எதிராக தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்கள் ஆஜராக உத்தரவிடப்பட்டது. நீதிமன்றத்தில் ஆஜரான அதிகாரிகள், சூசன் ஜான் என்ப வருக்கு சொந்தமான கட்டிடத்தை ஆகஸ்ட் 15 ஆம் தேதி பூட்டி சீல் வைத்துவிட்டதாக கூறியதுடன், தாமதமாக நடவ டிக்கை எடுத்ததற்காக நிபந்தனையற்ற மன்னிப்பையும் கோரினர். தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவத்ஸவா, நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ஆக்கிர மிப்பாளருக்கு அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் அலட்சியமாகவும், செய லற்றும் இருந்துள்ளதாக அதிருப்தி தெரிவித்தது. தங்கள் தவறுக்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி யதை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், தாமதமா னாலும் விதிமீறல் கட்டிடத்தை பூட்டி சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தர வையும் பிறப்பிக்க தேவையில்லை என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். அதேசமயம், விதிமீறல் கட்டிடங்கள் தொ டர்பாக நீதிமன்றத்தின் உத்தரவுகளைப் பின்பற்றுவதில் எச்சரிக்கையாகவும், கவனமாகவும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?