விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் பருவமழை முன்னேற்பாட்டு பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ராமன், கலெக்டர் நேரில் ஆய்வு



விழுப்புரம், அக்.23–


விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் எஸ்.ஏ.ராமன், மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ராமன் தெரிவிக்கையில்,


விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம் கொடூர் ஊராட்சி ஆண்பாக்கம் கிராமபகுதி இடையே உள்ள சிறு தரை பாலத்தில் வடகிழக்கு பருவமழையொட்டி நேற்று பெய்த மழையினால் அதிகம் நீர் வருவதை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டதோடு, பொதுமக்கள் பாலத்தினை கடக்க முடியாத சூழ்நிலையில் ஆண்பாக்கம் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் 56 நபர்கள் தங்கவைக்கப்பட்டு காலை உணவு மற்றும் மதிய உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டும், முகாமில் உள்ள பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.


அதனை தொடர்ந்து வானூர் வட்டம் பொம்மையார்பாளையம் ஊராட்சியில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


மேலும் கடற்கரை ஓரம் வசிக்கும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்கவைப்பதற்காக அடிப்படை வசதிகளான தங்கும் அறை, குடிநீர், கழிப்பறை, உணவு மற்றும் உணவுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் போன்றவைகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது. தொடர்ந்து பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் புயல் எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியினை பார்வையிட்டு ஆய்வு செய்யப்பட்டது.


விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையையொட்டி பெய்து வரும் தொடர் கனமழையினை தொடர்ந்து அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.


இந்த ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், ஒன்றிய குழு தலைவர் உஷா முரளி, உதவி திட்ட அலுவலர் சுரேஷ்உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%