விஸ்வ ஹிந்து பரிஷத் வந்தவாசி ஜில்லா சார்பில் நடைபெற்ற வேல் பூஜை

விஸ்வ ஹிந்து பரிஷத் வந்தவாசி ஜில்லா சார்பில் நடைபெற்ற வேல் பூஜை


வந்தவாசி, அக் 29:


விஸ்வ ஹிந்து பரிஷத் வந்தவாசி ஜில்லா சார்பில் வந்தவாசி நகர் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் வேல் பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வில் பக்தர்கள், பொதுமக்கள் வேல் அபிஷேகம், கோமாதா பூஜையை மேற்கொண்டனர். தொடர்ந்து கந்த சஷ்டி பாராயணம், கூட்டுப் பிராத்தனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இந்த வைபவத்தில் 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் விஎச்பி மாவட்ட, நகர, ஒன்றிய, கிராம பரிஷத் பொறுப்பாளர்கள், பூசாரிகள் பேரமைப்பு, மற்றும் பஜ்ரங்தள் நிர்வாகிகள், சங்க பரிவார் அமைப்புகள், இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%