மொடக்குறிச்சி வட்டத்தில் வீட்டுமனை கேட்ட மாற்றுத்திற னாளிகள் அலைக்கழிக்கப்படுவ தாகப் புகார் எழுந்துள்ளது. ஈரோடு மாவட்டம், மொடக் குறிச்சி வட்டத்தில் போதுமணி மற்றும் சீனிவாசன் ஆகியோ ருக்கு, அரச்சலூர் பேரூராட்சிக் குட்பட்ட புதுப்பாளையம் பகுதி யில் இலவச வீட்டுமனை வழங்கப் பட்டது. அந்த இடத்தில் குடியேறு வதற்காக குடிசை அமைத்தனர். ஆனால், அப்பகுதியைச் சேர்ந்த ஆதிக்க சக்திகள் குடிசையைப் பிரித்து எரிந்தனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதர வாக தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் சார் பில் போராட்டம் அறிவிக்கப்பட் டது. இதைத்தொடர்ந்து குலூர் ஊராட்சியில் வீட்டுமனை வழங் கப்படும் என உறுதியளிக்கப்பட் டது; இடமும் காட்டப்பட்டது. ஆனால், பட்டா வழங்கப்பட வில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இருவரும் வட்டாட்சியர் அலுவ லகத்திற்கு நடையாய் நடந்து கொண்டுள்ளனர். இதுகுறித்து விசாரித்ததில் ஏற்கனவே வழங் கப்பட்ட பட்டா ரத்து செய்யப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அதிகாரிகள் அலட்சி யப்படுத்தாமல் உடனடியாக மாற் றுத்திறனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?