வெந்தயத் துவையல்

வெந்தயத் துவையல்

வெந்தயத்தின் பயன்கள் வெந்தயத்தில் நார்ச்சத்து உள்ளது வெந்தயம் குளிர்ச்சியை தரும்வெந்தயம் சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாகும் எப்படி செய்வோம் என்று இப்போது நாம் பார்க்கலாம் தேவையான பொருள்கள் :வெந்தயம் இரண்டு ஸ்பூன், புளி சிறிதளவு ,நான்கு காய்ந்த மிளகாய் வற்றல் ,சிறிதளவு பெருங்காயம் ,தனியா, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு ,ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய் ,தேவையான அளவு உப்பு. செய்முறை :முதலில் புளியை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் வெந்தயத்தை எண்ணெய் இல்லாமல் வெறும் வாணலியில் சிவக்க பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும் தனியாவையும் எண்ணெய் இல்லாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும் சிறிது கட்டிப் பெருங்காயத்தையும் எடுத்துக் கொள்ளவும் காய்ந்த மிளகாயை எண்ணெயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும் இப்பொழுது ஊற வைத்த புளி ,தனியா, வெந்தயம் ,மிளகாய், பெருங்காயம் ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும் பிறகு வாணலியில் சிறிது நல்லெண்ணையை விட்டு கடுகு போட்டு பொறிந்த உடன் கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சிறிது கருவேப்பிலையை போட்டு நன்றாக வதக்கி அரைத்து வைத்த விழுதையும் அதில் சேர்க்கவும் பின்பு ஒரு நிமிடம் அதை நன்றாக கிளறி கீழே இறக்கி வைத்து விட்டு சூடாக சாதத்தை எடுத்து இந்த துவையலைப் போட்டு பிசைந்து சாப்பிட்டால் மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் இது புளியோதரையைப் போன்ற சுவையையும் கொடுக்கும் ஒருமுறை சாப்பிட்டு பார்த்தால் பின் மீண்டும் சாப்பிட தோன்றும் நீங்களும் முயற்சி செய்து பாருங்களேன்.



திருமதி எம்எல் பிரபா.

ஆதம்பாக்கம்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%