ஸ்ரீராமபுரம் தயானந்த நகரில் உள்ள பெங்களூர் திருவள்ளுவர் சங்கத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா
Jul 27 2025
10

ஸ்ரீராமபுரம் தயானந்த நகர்,
7-வது கிராஸ் பகுதியில் உள்ள பெங்களூர் திருவள்ளுவர் சங்கம் இந்த சங்கத்தில் உள்ள காமராஜர் அறக்கட்டளை சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 123 வது பிறந்தநாள் விழா பெங்களூர் திருவள்ளுவர் சங்கத் தலைவர் எஸ்.டி.குமார் தலைமையில் கொண்டாடப்பட்டது. விழாவை திருக்குறள் போற்றி சங்க நிர்வாகி இலட்சுமணன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கர்நாடக இந்து நாடார் அசோசியேசன் செயலாளர் கிருஷ்ணவேணி, பாலகிருஷ்ணன், ராஜேந்திரன், சம்பத், ஜே சரவணன் விஸ்வநாதன்,
ஆகியோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரணங்களை பெங்களூர் திருவள்ளுவர் சங்க தலைவரும் தாய்மொழி கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளருமான எஸ்.டி.குமார் வழங்குகினார். சங்க செயலாளர் பிரபாகரன் நன்றி உரை ஆற்றினார்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?