*ந ம சி வ ய* த்தின் மகிமை

*ந ம சி வ ய* த்தின் மகிமை


"ந ம சி வ ய" என்பது தனித்தனி அட்சரங்கள் ஆகும். அது ஒரு வார்த்தை அல்ல. ஒவ்வொரு எழுத்தும் தனித்தனியான வேலைகளை செய்கிறது. ஒன்றோடு மற்றொன்று கூடும் போது அதை சார்ந்த வேலைகள் நடைபெறுகிறது. 'நமச்சிவாய' என்று உச்சரித்தல் கூடாது. 'ச்' என்ற எழுத்துடன் சேர்த்து பஞ்சாட்சரத்தை உச்சரிக்கும் பொழுது ஆறு எழுத்தாக உருவாகி பஞ்சாட்சரம் வேலை செய்யாமல் போகிறது. பஞ்சாட்சரத்தில் அனைத்து அட்சரங்களுமே குறில் எழுத்துக்களாகவே அமையப்பெற்றுள்ளது. எனவே நமசி_வா_ய என்றும் உச்சரித்தல் ஆகாது. 'வா' என்ற நெடில் எழுத்தால் பஞ்சாட்சரம் தன்னிலை கெடுகிறது. எனவே *ந ம சி வ ய* என்று உச்சரிக்கும்பொழுது அதன் முழு பலன்களும் நம்மிடம் வந்து சேர்கிறது. எனவே தான் *ந ம சி வ ய* என்ற பஞ்சாக்ஷரத்தை ஒருதலை மாணிக்கம் எனவும் *சிவ சிவ* என்பதை இறுதலை மாணிக்கம் எனவும் திருமூலர் பெருமானார் கூறுகிறார். அதாவது, பஞ்சாட்சரத்தில் ஒரு 'சிவ' வும் சிவ சிவ வில் இரண்டு 'சிவ' வும் வருவதால் அவ்வாறு கூறுகிறார். (சிவ சிவ என்கிலர் தீவினையாளர்-சிவ சிவ என்றிட தீவினை மாளும்-சிவ சிவ என்றிட தேவரும் ஆவர்-சிவ சிவ என்றிட சிவகதி தானே. *திருமூலர்*) என்று விளக்குகிறார். 

இந்த பஞ்சாட்சரமே அண்டத்தின் சகல இயக்கங்களுக்கும் ஆதாரமாய் விளங்குகிறது என்பதை கொங்கணர் பெருமானார் விளக்கும்போது, ஐந்தெழுத்தானதும் எட்டெழுத்தாம்-பின்னும் 51 அக்ஷரம் தானாச்சி-நெஞ்செழுத்தாலே நிலையாமல் அந்த நேசம் தெரியுமோ வாலைப்பெண்ணே என்று குறிப்பிடுகிறார். 'சி வ ய' என்ற அக்ஷரத்திற்குள் சிவபெருமான் நீக்கமற குடிகொண்டிருக்கிறார் என்பதை, சி வ ய என்ற அக்ஷரம் சிவன் இருக்கும் அக்ஷரம்-உபாயம் என்று நம்புதற்கு உண்மையான அக்ஷரம்-கபாடமற்ற வாயிலை கடந்துபோன வாயுவை-உபாயம் இட்டழைக்குமே சி வ ய அஞ்செழுத்துமே என்று சிவவாக்கியர் பெருமான் குறிப்பிடுகிறார். 


தொடரும்--------


சுவாமி ஸ்ரீராம் சித்ரகுப்த ஜி மஹராஜ், சித்ரகுப்த அக்காடா.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%