
சென்னை, ஆக.13–
அண்ணா தி.மு.க. பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, ‘மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரம் 23–ந் தேதி முதல் 25–ந் தேதி வரை, கீழ்க்கண்ட சட்டமன்றத் தொகுதி வாரியாக, மேற்கொள்கிறார்.
23–ந் தேதி சனி – திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் திருவெறும்பூர், திருச்சி மாநகர் – திருச்சி கிழக்கு, திருச்சி புறநகர் தெற்கு – லால்குடி, 24–ந் தேதி -- ஞாயிறு – திருச்சி புறநகர் வடக்கு – மணச்சநல்லூர், துறையூர், முசிறி, 25–ந் தேதி -- திங்கள் – திருச்சி புறநகர் தெற்கு – மணப்பாறை, திருச்சி மாநகர் – திருச்சி மேற்கு, திருச்சி புறநகர் வடக்கு – ஸ்ரீரங்கம் ஆகிய தொகுதிகளில் சூறாவளி சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
புரட்சித் தமிழரின் எழுச்சிப் பயணத்திற்கான ஏற்பாடுகளை, சம்பந்தப்பட்ட மாவட்டச் செயலாளர்கள் சிறப்பான முறையில் செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இந்த எழுச்சிப் பயணத்தின்’ போது சம்பந்தப்பட்ட கழக மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டப் பொறுப்பாளர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழக சார்பு அணிகளின் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இத்தகவலை அண்ணா தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?