5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவை
Oct 24 2025
17
பெய்ஜிங், அக். 23- சுமார் 5 ஆண்டுகள் கழித்து வரும் அக்.26ஆம் தேதி முதல் இந்தியா - சீனா இடையிலான நேரடி விமான சேவைகள் தொடங்கப்படுகின்றன. மேற்கு வங்கத்தின் கொல்கத்தா நக ரத்துக்கும், சீனாவின் குவாங்சோ வுக்கும் இடையில் முதல் நேரடி விமா னங்கள் இயக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது. ஆனால் எந்த விமான நிறுவனம் இந்த சேவையை தொடங்குகிறது எனத் தெரியவில்லை. எனினும் ஏர் இந்தியாவாக இருக்க லாம் என கூறப்படுகிறது. அதே போல தில்லி மற்றும் சீனா வின் ஷாங்காய் நகரத்துக்கு இடையில் வரும் நவம்பர் 9 ஆம் தேதி முதல் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. வாரத்தின் புதன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில், ஏ 330-200 ரக விமானங்களின் மூலம் இந்த விமான சேவையானது இயக்கப்படுகின்றது. கடந்த 2020ஆம் ஆண்டு கொரோ னா பெருந்தொற்று காலத்தில் சீனா மற்றும் இந்தியா இடையிலான நேரடி விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. ஆனால், கிழக்கு லடாக் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழல்களைத் தொடர்ந்து விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட வில்லை. சமீபத்தில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டில் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதமர் மோடி யின் சந்திப்பைத் தொடர்ந்து, வணிக விமானங்கள் மீண்டும் தொடங்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் முன்னர் சுட்டிக்காட்டி யிருந்தது. தொடர்ந்து இந்தியா மற்றும் சீனா இடையில் அக்டோபர் மாதம் இறுதியில் நேரடி விமானங்கள் இயக்கப்படும் என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?