நம் சந்திப்புகளில்
தேய்ந்தன நாட்கள்.
நான் இப்போது
போன மாதத்தில்
இருக்கிறேன்.
கிடைக்காத போதும்
உந்தன் முத்தம்
நினைக்க இனிமையாக…
அணைக்காத போதும்
உந்தன் அன்பு
வந்துவிழுகிறது மடியில்…
சிற்பங்கள் உன்னிடம்
வடிவம் கற்றன.
ஓவியங்கள் உன்னிடம்
வளைவைப் பயின்றன.

-கே. பி. ஜனார்த்தனன்