tamilnadu epaper

இயற்கை உழவுக்கு திரும்புவோம்

இயற்கை உழவுக்கு திரும்புவோம்


 நாற்றங்கால்


 நெல்லை ஒருநாள் ஊற வைத்து மறுநாள் தொங்கவிட்டு முளைத்த பின் நாற்றங்காலில் விதைத்து வளர்ப்பார்கள்


 வயல்

 நீர் பாய்ச்சி நிலத்தை உழுது சேறாக்குவார்கள் பின் இலை

யும் தலையும் போட்டு எருவை

யும் கொட்டி தயாராக்குவார்கள்


 நடவு

 வயலை சுற்றி அண்டை சேறு வைத்து பயிரை பறித்து வந்து வேர் மண்ணில் பதிய வைத்து நடவு செய்வார்கள் ஓரளவாய்


 களை பறிப்பு


 நடவு செய்த பயிர் வளர்ந்து பச்சை கட்டி குத்து கட்டிய பின்னால் பாசிகளையும் களைகளையும் அகற்றுவார்கள்


 கதிர் வாங்குதல்


 தக்கப்பருவத்திலே நெல் பயிர் கதிர்களை கக்கும் பாலேறி காயாகி பழுக்கும் விளைந்தாள் வளர்த்து தங்க நிறமாக மாறும்


 அறுவடை


 பழுத்த நெல்தாளை அறுவாள் கொண்டு அறுப்பார் கட்டு கட்டி களத்துக்கு கொண்டு வருவார் கதிரை அடித்து நெல்லை 


இராசி


  பிரித்து தாளைதாம்பு கட்டி ஒட்டி தாளடி நெல்லையும் புல்லையும்

 உலர்த்தி போரும் மலை போல நெல் குவிக்கும் களஞ்சியத்தில் நெல் சேர்க்கப்படும்


 வேதியல்


 செயற்கை உரம் உப்பு ஊரியா உயிர் கொல்லி பூச்சி கொல்லி களைக்கொல்லி அன்றைக்கு நாம் அறியோம் அறியோம்


 நோய்க்கு வித்து


 மேலைநாட்டு வேதியல் பொருள்களே நோய்க்கும்  

நோகாட்டுக்கும் வித்து

 அடிப்படை காரணமாகும்


 நஞ்சு


 தாய்ப்பால் மாட்டுப் பால் தண்ணீர் காற்று தானியங்கள் காய்கறிகள் பழங்கள் கீரைகள் நஞ்சாகி வாட்டி வதைக்கிறது


 இயற்கைக்கு திரும்புவோம்


 முன்னோரின் வழிக்கு நாம் திரும்புவோம் நஞ்சிலா உலகம் படைப்போம் நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் பெற வாரீர் வாரீர்.



பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி 

சேலம்