பன்மொழி கொண்டோம்
பன்மதங் கண்டோம்
பல்லினம் கண்டோம்!
*இந்தியராய்*
*ஒன்றிணைவோம்*
*விந்தையராய்*
*ஒன்றிணைவோம்*!
ஏற்றங்கள் பலவுண்டு
போற்றுதல்கள் சிலவுண்டு
தூற்றல்கள் பலவுண்டு
மாற்றங்கள் சிலவுண்டு!
*வேற்றுமையில் ஒற்றுமை*
*சாற்றிடுவோம் எந்நாளும்*!
முனைவர்
இராம வேதநாயகம்