திறமை எங்கே இருந்தாலும் அதை மதிக்கனும் பாராட்டனும் அது தான் என் பாலிசி என்றாள் ஹவுஸ் ஓனர் மல்லிகா," />
tamilnadu epaper

இரு கோடுகள்

இரு கோடுகள்


           " திறமை எங்கே இருந்தாலும் அதை மதிக்கனும் பாராட்டனும் அது தான் என் பாலிசி என்றாள் ஹவுஸ் ஓனர் மல்லிகா, தன் வீட்டு வேலைக்காரி ராணியிடம் பள்ளி வாசலில் புன்சிரிப்போடு ..."


       "அதுக்கும் ஒரு பெரிய மனசு வேணும்ம்மா உங்க பொண்ணை விட அதிக மார்க் வாங்கி பள்ளியில் முதலிடம் பிடத்த என் மகள் ரதியை பாராட்டினது பெருந்தன்மையாகவும் மனநிறைவாகவும் இருக்கின்றது என்றாள் வீட்டு வேலைக்காரி ராணி .


     வாயால பாராட்டினா மட்டும் போதாது ரதியின் கல்லூரி படிப்புக்கும் பணம் கட்டுகிறேன் அவள் கல்லூரி படிப்பு முடியும் வரை மற்ற செலவுகளையும் நானே செய்கிறேன் . இது உதவி அல்ல உன் மகள் திறமைக்கு கொடுக்கும் அங்கீகாரம் என்றாள் ராணியிடம் மல்லிகா .


    " தன் குடிகார கணவனை நினைத்து கண்ணீர் சிந்தி அழுது விட்டு , சேலையால் கண்ணை துடைத்துக் கொண்டு முதலாளியம்மா சொன்ன வார்த்தைகளில் நனைந்து மெய் சிலிர்த்து மனதார சொன்னாள் ராணி ... நீங்க மனிதப்பிறவி அல்ல தெய்வம்மா என்றாள் ஒரே வார்த்தையில் வீட்டு வேலைக்காரி .


     மன நிறைவோடு வீட்டுக்குள் நுழைந்த ஹவுஸ் ஓனர் மல்லிகாவுக்கு தன் மகள் சுருதிக்கு பணம் சொகுசு வாழ்க்கை , கல்விக் கண்ணை மறைத்து விட்டது குறைந்த மதிப்பெண் வாக்கி இருக்கிறாளே என்று மனதில் நினைத்த போது கண்ணீர் துளிகள் அவளையறியாமல் வெளிப்பட்டது வேகமாக ....."


- சீர்காழி.ஆர் . சீதாராமன் .

- 9842371679 .