ரிஷிகேஷ், மார். 15
உத்தரகாண்ட் மாநிலம் தேரி மாவட்டத்தில் இந்தியாவின் உயரமான அணையான தேரி அணைக்கட்டு பகுதியில் இளைஞர்களுக்கு சாதன விளையாட்டுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. வாட்டர் செயிலிங், பாராகிளைடிங், மலையற்றம் போன்ற விளையாட்டுகளில் மாநில அரசின் அங்கீகாரத்துடன் உரிய விதிமுறையுன் பயிற்சி வழங்கப்படுகிறது. இளைஞர்களிடையே உள்ள சாதனை உணர்வை வெளிப்படுத்தும் நோக்கில் பாரா கிரைண்டிங் (Paragliding )1500 அடி உயரமுள்ள மலை உச்சியில் இருந்து குதித்து காற்றோட்டத்தின் அசைவில் லாவகமாக கீழே இறங்கும் பயிற்சியாகும். இப்ப பயிற்சியில் தமிழகத்தை சேர்ந்த தேசிய நாட்டு நலப் பணித்திட்ட மேனாள் திட்ட அலுவலரும் மாநில நல்லாசிரியர் விருத்தாளரும் தமிழ்நாடு இ- பேப்பர் ரிஷிகேஷ் நிரூபருமான ரெ. சுப்பா ராஜு சாதனை விளையாட்டில் பயிற்சி எடுத்துக் கொண்டுள்ளார். சொப்பன உலகில் நீர்க்குமிழி போன்ற வாழ்க்கையில் புதிய அனுபவத்தை இளைஞர்கள் பெற வேண்டும் என்கிறார். இவர் ஏற்கனவே ஒற்றை இஞ்சின் பொருத்தப்பட்ட கி ளைடர் விமான பயிற்சியை திருவனந்தபுரத்தில் பெற்றவர் என்பதும் உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் சத்பால் மகராஜ் அவர்களின் பாராட்டை பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.