tamilnadu epaper

எங்களிடமும் ஏவுகணை உள்ளது: அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

எங்களிடமும் ஏவுகணை உள்ளது: அமெரிக்காவின் மிரட்டலுக்கு ஈரான் பதிலடி

ஈரான் மீது குண்டு வீசுவோம் என டொனால்டு டிரம்ப் மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து, எங்களிடமும் ஏவுகணைகள் உள்ளது என ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. ஈரான் அரசு அணுசக்தி ஆராய்ச்சியை தீவிரப் படுத்தி வருகின்றது. இதனை அவர்கள் நிறுத்த வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகின்றது.


 குறிப்பாக ஈரான் அரசு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றச் சாட்டை முன்வைத்து வருகின்றது. இந்த குற்றச் சாட்டை மறுத்து தங்களது உள்நாட்டு எரிசக்திக் காக அணுசக்தி துறையை பயன்படுத்துவதாக ஈரான் தெரிவித்து வருகின்றது. மத்திய கிழக்கில் அமெரிக்காவின் திட்டத்திற்கு ஆதரவாக இல்லாத நாடாக ஈரான் உள்ளது. இத னால் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள், ஈரானின் அணுசக்தி ஆராய்ச்சியை கட்டுப்படுத்தும் வகையில் 2015 இல் ஈரானுடன் ஒப்பந்தம் செய்துகொண்டன.


 டிரம்ப் ஆட்சியில் இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறியது. ஈரான் யுரேனி யம் செறிவூட்டல் தொழில்நுட்பம் மூலம் அணு சக்தி துறையில் தீவிரமான ஆராய்ச்சியை தொடர் ந்தது. இதனால் பல தடைகளை அந்நாட்டின் மீது டிரம்ப் விதித்தார். தற்போது மீண்டும் இந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும் என வற்புறுத்தி வருகின்றார். இந்த பேச்சுவார்த்தைக்கு ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் மற்றும் மதத் தலைவர் அலி கொமேனி ஆகியோர் உடன்படவில்லை.


 இந்நிலையில் அமெரிக்காவின் ஒப்பந்தத் திற்கு ஈரான் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் அந்நாட்டின் மீது குண்டு வீசி தாக்குதல் நடத்து வோம். இந்த தாக்குதல் அவர்கள் எதிர்பார்க்காத வகையில் இருக்கும். மேலும் நான்கு ஆண்டு களுக்கு முன் விதித்தது போல மிக கடுமையான பொ ருளாதாரத் தடைகளை ஈரான் மீதும் அதன் நட்பு நாடுகளின் மீதும் விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டலுக்கு அடிபணியாத ஈரான் அரசு, உலகம் முழுவதும் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்தும் திறனுடன் எங்களிடம் ஏவுகணைகள் உள்ளன. அதில் சில ஏவுகணைகள் தயார் நிலையில் உள்ளன என அமெரிக்காவிற்கு பதிலடி கொடுத்துள்ளது.