மனிதர்கள் கரத்தில் வாழும் மகத்தான குடை நான்!
கேளுங்கள் என் கதையை சற்றே நேரமெடுத்து!
மனிதர்களுடன் நல்ல நெருக்கம் எனக்குண்டு!
எல்லோர் வீட்டிலும் எனக்கோர் தனியிடம் உண்டு!
சின்னக் குழந்தையும் வயதான முதியோரும் மழை, வெயிலைக் கண்டால் தேடுவது என்னையே!
பற்பல நிறங்களில்
பரவசம் கொடுப்பேன்!
எவர் தாக்கினாலும் பாதுகாப்பாய் இருப்பேன்!
இளமையும் எனை விரும்பும்!
முதுமைக்கும் என் உதவி தேவை!
உள்ளங்கையில் வாழ்ந்தாலும் விளம்பரம் விரும்பேன்!
நல்லவர் தீயவர் என்ற வேற்றுமையும் எனக்கில்லை!
நிமிர்ந்து நின்றாலும் ஆணவம் இன்றி வளைந்து கொடுத்து வாழ்பவன் நான்!
திருமணத்தன்று காசிக்குப் போகும் மாப்பிள்ளைக்கு நிழலாய் செல்வது நானே!
கொட்டும் மழையிலும் கொளுத்தும் வெய்யிலிலும் ஓய்வின்றி உழைப்பேன் நான்!
பரிவாய் எனை மடித்து கைப்பையில் பத்திரமாய் எடுத்துச் செல்வோர் பலருண்டு!
என் கரம் பிடித்தவரைக் கைவிட மாட்டேன்!
சந்தோஷமாய் முகம் மலர்ந்து இறுதி வரை காப்பேன்!
ராதாபாலு
குடந்தை