காதல் காற்று
வீசும் நேரம்
கடமை எல்லாம் பறந்தே போகும்!
உணவும்
உறக்கமும்
மறந்தே போகும்!
காணும்
உலகமும்
காலடியில்
நழுவும்!
அவனெங்கே சென்றானோ
அவள் மனதும்
சென்றே
கற்பனையில் களிப்புடனே
அவனை
தழுவும்!
புதிதான
பாதையிலே
இருவர்
கால்களும்
நடக்கும்!
காதல்
ஊன்றிய
உள்ளத்திலே
உணர்ச்சிகளின்
கலவரங்கள் வெடிக்கும் !
இயல்பாக
இருப்பதாக
இதயங்கள்
நடிக்கும்!
பார்வைகளின் பரிமாற்றத்தில்
ஆசைகள் எல்லைமீறும்!
எதைப்பற்றியும்
கவலைப்படாமல்
இடைப்பற்றி
இறுக்கியணைத்து
இதழ்களில்
சுவை தேடிட
இருவருக்கும் ஆசைகள் எல்லை மீறும்!
மோகத்தீயில்
தேகம் தானாய் வேகும்!
திருநாள்
ஒன்றில் ஒன்றுடன் ஒன்றாய்
ஒன்றியதும்
வாழ்க்கை ஆனந்தமாய் மாறும்!!
-ரேணுகா சுந்தரம்