மனிதன் வளர்க்கும் விலங்கிலே நன்றி உள்ள உயிரினம் நாயே வாடையும் ஜாடையும் அறியும் அது வளர்த்தவனை கண்டால்
நாய் கொஞ்சி கொஞ்சி மகிழும் தாவீ ஏறி கொஞ்சு குலாவி நன்றி காட்டும். அடித்தாலும் திட்டினாலும் வாலை ஆட்டும்
நாலு காலு வால் விலங்கினம்
நன்றி காட்டும் விலங்கினம் புதிய வரை கண்டால் வீரம் சேர்த்து குரைப்பதே காவல்
இரவிலும் பகலிலும் பொய் தூக்கம் தூங்கும் சின்ன ஒலி கேட்டாலும் எழுந்து விடும் பலமாக குரைக்கும் காவல்
நம் மந்தையிலும் பட்டியலும் வீட்டிலும் இது காவல் தெய்வம் சுற்றி சுற்றி காவல் செய்யும் கயிறும் சங்கிலியும்வேண்டாம்
பழைய சோறும் எச்சில் சோறும்
கடித்த எலும்பும் கஞ்சியும் ஏற்ற உணவாகும் உண்டு விட்டு கொழு கொழு என்று உள்ளது
காராட்டு காலத்தில் மட்டும் தங்காது தரிக்காது பெட்டை நாயை தேடி தேடி நாடி நாடி ஓடி விடும் அடித்து உதைத்தாலும்
ஓடும் சில நிமிடங்களில் வந்து விடும் அதற்கும் காம வெறி தலைக்கேறி நிற்கும் தானே பெட்டை நாய் பின்னாலே
போகும் ஊர்வலம் ஊர்வலம் விரும்பும் கடுவனுடன் உறவு கொள்ளும் மற்ற கடுவன்கள் காவலுக்கு நிற்கும் அங்கு
பொறாமையுடன் வெந்து தணியும் ஓரிரு நிமிடங்களில் ஆளுக்கு ஒரு பக்கம் நிற்கும் நாயின் உடலுறவு இப்படித்தான்
நாய் என்ன சினையானால் தன் வீட்டுக்கு வந்து சேரும் நாட்டு நாயின் நலமான வாழ்க்கை இது தான் பாரீர்
பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி
சேலம்