சூடான மரணம்
நெருப்பில் விழுந்த
எறும்புகள்.
வாடிய பயிரைக் கண்டு
வாடினார் வள்ளலார்
மேகங்களே மழையே நீங்கள்!
மின்சார சிக்கனம் பற்றி
மேடையில் தலைவர் பேசினார்
மின்னொளி வெள்ளத்தில்.
பூட்டிய வீட்டுக்குள்
கட்டிய தோரணம்
சிலந்தி வலை!
காதலன் இதயத்தில்
லப் டப் ஒலியுடன்
காதலியின் நினைவுகள்!
-பூ.சுப்ரமணியன்
பள்ளிக்கரணை, .
சென்னை