tamilnadu epaper

80'ஸ் கிட்ஸ் !

80'ஸ் கிட்ஸ் !


சைக்கிளில் பெல் அடித்தபடி ...மிஸ்டு கால் கொடுத்து

காதல் அம்பு விட்டது 80'ஸ்கிட்ஸ் காலம் !

உள்ளம் தொட்ட கவிதை வரிகள் இடம் பெற்ற பொங்கல் வாழ்த்து அட்டையை தேர்ந்தெடுத்து... அவளின் தோள் பையில் சொருகியதும் 80'ஸ்

கிட்ஸ் காலம் !


சனி, ஞாயிறு விடுமுறையில் அவள் வசிக்கும் தெருவில் நண்பர்களுடன் சைக்கிள் பயணம் வந்ததும்...

80'ஸ் கிட்ஸ் காலம் !



கருப்பு வெள்ளை தொலைக்காட்சியில்

ஒளியும் ஒலியும் நிகழ்ச்சியில் வரும் காதல் பாடல்களை

கண்டு கனவு கண்டதும் 80 'ஸ் கிட்ஸ் காலம் ...


இருக்கும் ஒரே வெள்ளை சட்டை, காக்கி உடையை கரிப்பெட்டியில் தேய்த்து மடிப்பு களையாமல், பள்ளிக்கு வந்ததும் 80 ' ஸ் கிட்ஸ் காலம் !


தன்னை ராமராஜனாகவும், தான் விரும்பும் மாணவியை ரேகாவாகவும் மனதில் நினைத்து 'இந்த ராசாவின் மனசிலே ' ... பாடலை

முனுமுனுத்ததும் 80ஸ் கிட்ஸ் காலம் !



-எம்.பி.தினேஷ்.

கோவை - 25