tamilnadu epaper

கோடை மழை

கோடை மழை


கொட்டுது கொட்டுது

கோடை மழை

வீசி அடிக்குது

காற்று மழை



இடியும் மின்னலும்

கூடும் மழை

இதமாய் வெப்பம்

குறைக்கும் மழை.



வறண்ட நிலத்தில்

வீழும் மழை

வாசல் தெருவில்

ஊறும் மழை.


உழவு செய்ய

உதவும் மழை

உழைக்கும் மனிதர்

விரும்பும் மழை



ஏரி குளம்

நிரம்பும் மழை

எங்கள் பூமி

செழிக்கும் மழை


எங்கும் மழைநீர்

தேக்கிடுவோம்

எல்லா உயிர்க்கும்

உதவிடுவோம்.


கூத்தப்பாடி மா . கோவிந்தசாமி