சீனாவின் ஹுனன் மாகாணத்தில் உள்ள யுவான்ஷுயி நதியில் படகு மோதி விபத்திற்குள்ளானதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
யுவான்ஷுயி நதியில் பெரிய படகு ஒன்றுடன் பயணிகள் படகு மோதி நதியில் கவிழ்ந்ததில் 11 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த விபத்தில் நதியில் விழுந்த 5 பேரைத் தேடி வருகின்றனர்.
மத்திய சீனாவின் ஹுனான் மாகாணத்தில் யுவான்ஷுயி நதியில் தொழில்துறை கப்பல் ஒன்று சென்றுக் கொண்டிருந்தது. இந்த கப்பல் மீது பயணிகள் படகு ஒன்று மோதியதில் 11 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், 5 பேர் காணாமல் போனதாக மாநில செய்தி நிறுவனமான சின்ஹுவா உறுதிபடுத்தியுள்ளது.
யுவான்லிங் கவுண்டியில் உள்ள யுவான்ஷுய் ஆற்றில் எண்ணெய் கசிவை சுத்தம் செய்யும் கப்பல் பயணிகள் படகில் மோதியதில் ஆரம்பத்தில் 19 பேர் கடலில் விழுந்துள்ளனர். இதில் 3 பேர் மீட்கப்பட்டனர். 2 பேர் சிறிது நேரத்திலேயே இறந்து கிடந்தனர்.
அவசரகால பணியாளர்கள் பயணிகள் கப்பலை மீட்டனர். அதன் பின்னர் மேலும் 9 பேர் இறந்தது உறுதி செய்யப்பட்டதாக சின்ஹுவா அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அந்தப் பகுதியில் தண்ணீர் ஆழமாக உள்ளது என்றும், தொடர்ந்து காணாமல் போன 5 பேரைத் தேடும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.