புதுச்சேரி, மே 14–
புதுச்சேரியில் பழமை வாய்ந்த காமாட்சி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவில் அம்மனுக்கு 108 பால்குட அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் முக்கியநிகழ்வான கிண்ணித்தேர் சித்ரா பவுர்ணமி அன்று நடந்தது.
கிண்ணித் தேர் என்பது ஒரு சிறப்பு ரதமாகும். இதில் தேரை பித்தளைக் கிண்ணங்களால் அலங்கரித்து இருப்பதால் இதனை கிண்ணி தேர் என்று அழைக்கிறார்கள். முன்னதாக அம்மனுக்கு விசேஷ சந்தன காப்பு நடந்தது. அதன்பின்னர், அலங்கரிக்கப்பட்டு கிண்ணி தேரில் கொலுவிறக்கம் செய்யப்பட்டு தீபாரதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் ஸ்வாமி தரிசனம் செய்தனர் . நள்ளிரவில் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை விடிய விடிய வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.