tamilnadu epaper

சேதமான சங்குகளால் சுவாமிக்கு அபிஷேகமா.?..

சேதமான சங்குகளால்   சுவாமிக்கு அபிஷேகமா.?..


ராமேஸ்வரம், ஏப். 23– -

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள், புனித நீராடி தரிசனம் செய்கின்றனர். மேலும், கோவிலில் 108 மற்றும் 1,008 சங்குகள் அபிஷேகம் பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இப்பூஜை, சுவாமி சன்னதி அருகில் பக்தர்கள் முன்னிலையில் நடக்கும். குருக்கள் பூஜை செய்து பிரசாதம் வழங்குவர். இதற்காக கோவில் நிர்வாகம் 3,000 மற்றும் 10,000 ரூபாய் வசூலிக்கிறது.


பக்தர்கள் வேதனை:


நன்கொடையாளர்கள், 30 ஆண்டுகளுக்கு முன் தானமாக வழங்கிய 1,008 சங்குகளை முறையாக சுத்தம் செய்து பராமரிக்காமல் பூஜை முடிந்ததும் சாக்கு மூட்டையில் அள்ளி போட்டு மரப்பெட்டிக்குள் வைக்கின்றனர். இதனால், 90 சதவீதம் சங்குகள் அழுக்கு படிந்தும், முனை பகுதிகள் உடைந்தும் உள்ளன. இவற்றை பூஜைக்கு பயன்படுத்துவதை காணும் பக்தர்கள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர்.