tamilnadu epaper

சொல்லாத ரகசியம்

சொல்லாத ரகசியம்

                                                            

பள்ளி சீருடையில் மஞ்சப்பையில் பாடப் புத்தகங்களை இடது கையில் பிடித்தபடி துள்ளிக் குதித்து வரும்போது மனதில் எழும் புத்துணர்வு எழுச்சியில் கஸ்தூரி யின் கல கல சிரிப்பொலி அவள் அழகை மெருகேற்றியது அவள் பின்னிய ரெட்டச்சடை அவளோடு அதுவும் தாவி பறப்பது கஸ்தூரியின் மகிழ்ச்சி அதிகமானது .

வயல் வெளியை கடந்து ஒற்றைப் பாதையில் அவள் வருவதையே பார்த்தான் காளையன்.

அவன் பார்ப்பது அவளுக்கு தெரியாது என்றெண்ணி அரசமர மறைவில் மறைந்திருந்தான் .

கஸ்தூரி பள்ளியில் இருந்து வரும் போது காளையன் பின் தொடர்வது அவள் அறிந்தவள் ஆனால் அதை காட்டிக் கொள்ளாமல் அவன் தன்னைப் பார்க்கும் அழகை பார்த்து ரசித்து குதுகளிப்பது தான் அவளின் துள்ளல்.

காளையனின் துடுக்கான பேச்சு, படிப்பில் கவனம் சிதறாமல்,ஏற்றுக் கொள்ளும் பக்குவம்,சந்தேகம் எதாவது கேட்டாள் என்னிடம் நோட் வாங்கி எழுதி கொடுப்பான் ,மற்றவர்களிடம் கல கலப்பாக இருப்பவன் என்னைப் பார்த்தவுடன் மவுனமாகி விடுவான், நான் தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டு இருப்பான் விளையாட்டில் அவனின் திறன் கண்டு மகிழ்வாள் கஸ்தூரி.

மாலை கதிரவன் மேற்கில் மெதுவாக செவ்வொளி கதிரை பாய்ச்சி வண்ணங்களால் வசியம் பண்ணிக் கொண்டு இருக்க 

அரச மரத்தின் சற்று தூரத்தில் இருந்த வட்ட கிணற்றை அடைந்தாள் கஸ்தூரி. 

கொண்டு வந்த மஞ்சப்பையை மரத்தின் கீழ் வைத்தாள் ,தன்சடையைச் சுற்றி அதன் மேல் நெகிழி கவரை வைத்து கட்டினாள்,

தாவணியை கழற்றி வைத்தாள் ,மேல் சட்டையை கழட்டு முன் சுற்றும் முற்றும் பார்த்தாள் ,மரத்தின் மேல் பார்த்தாள் அரச மரத்தின் பசுமையான இலைகள்,இளம் செவ்விதழ் பழங்கள் 

இலைகள் தென்றலோடு சல்லாபம் கொண்டு நளினமாய் சரசமாடி 

கொண்டிருக்க,கொத்தாய் இருந்த பழங்களை, அணிலும்,கிளிகள்,மைனாக்கள்,ஜோடி ஜோடியாய் கொறித்து சுவைத்துக் கொண்டு இருக்க ,

"ஏய்....என்ன பாக்குரே உன் வேலை எதுவோ அதைச் செய் நீங்கள் பாக்குறது எனக்கு கூச்சமா...இருக்கு" எனச் சொன்னாள் 

கீய் கீய்..எனக் கத்தின கீளிகள் 

மரத்தின் பின்னாள் நின்றிருந்த காளையின்,தனக்குத்தான் அவள் சொல்கிறாள் என்றெண்ணியவன் மெதுவா..பின்னால் சென்று அவளுக்குத் தெரியாமல் செல்ல எண்ணினான், சருகுகள் மிதிபடும் சத்தம் கஸ்தூரியின் செவிகளில் சரசரக்க ஆ...வென அவனின் குரல் சிறிய முள் ஒன்று அவன் பாதங்களில் அழுத்தமாய் முத்தம் பதிக்க ,செடி, கொடிகளை விலக்கி விட்டு தடம் பார்த்து கொண்டு வந்த பையை சுமந்தபடி சென்றான் காளையன்.

காளையன் தன் அழகை கண்டு ரசிப்பான் அதன் காட்சியால் தன்மேல் காதல் கொண்டு தன்னிடம் பேசுவான் அவனிடம் நெருங்கி பழகிடலாம் என பல வித கற்பனைகளை மனதிலுள் உலாவ விட்டாள் கஸ்தூரி. அவனில்லை,இனி குளிப்பதா...வேண்டாமா..என எண்ணலைகள் சுழல,

இடுப்பில் இருந்த பாவாடையை ஏற்றி கட்டியவள் ,கிணற்றினுள் பாய்ந்தாள் கஸ்தூரி.

மீனாய் தண்ணீரில் சுற்றிச் சுற்றி வட்டமடித்து நீந்தி விளையாடினாள் அவள் குளிக்கும் அழகை மரத்தின் மேல் இருந்த கீளிகள் பார்த்து பார்த்து தன் குரலில் பாடின 

"இளம் மொட்டொன்னு மலர்ந்து தண்ணீரில் சரசமாடுது".......

 நீந்திய படி ஓரமாய் இருந்த படிகளில் வந்து நின்றாள்,அவள் பாவாடையை கழற்றி தண்ணீரை பிழிந்தெடுத்தாள்,அரச மரத்தில் இருந்த ஆண் கீளி இறக்கையை விரித்து தன் கண்களை மறைத்தது, பளிங்கு சிலை ஒன்று தண்ணீரில் மேல் நிற்பதைக் கண்டு ,

கஸ்தூரி படிகளில் நின்றாலும் தண்ணீர் மேலாடை போட்டு அவளின் மேனியை பாதுகாப்பு அரணாய் தழும்பிக் கொண்டிருந்தது 

பெண்களின் ஆடை இல்லா தேகத்தை மனிதனைத் தவிர ஐந்து பஞ்ச பூதங்களும் தழுவிக் கொள்ளும் அப்படித்தான் நீரும் கஸ்தூரியை தழுவிக் கொண்டு இருந்தது 

கிணற்றின் மேல் வந்தவள்,மேல் சட்டையை அணிந்து தாவணியை மேலே போட்டு மஞ்சப்பையை எடுத்துக் கொண்டு மரத்தின் மேலிருந்த பறவைகளுக்கு கையை அசைத்தபடி 

தடத்தில் சென்றாள் கஸ்தூரி.

 காளையன் கஸ்தூரி நினப்ப இருந்தாலும் படிப்பில் கவனத்தை சிதற விடவில்லை 

கஸ்தூரியும், காளையனும், ஒரே வகுப்பில் இருந்தாலும், காளையன் கடைசிபின் வரிசை யில் தன்னை யாரும் கவனிக்காதவாறு இருப்பான் .

 காளையின் பார்வை தன் மீது படும் போதெல்லாம் தேகம் புத்துணர்வால் மகிழ்ச்சி அடைவாள் .

இருவரும் இணைந்து வாழ விரும்பினாலும் ,

இவர்களை சந்திக்க முடியாமல் தடையாய் இருப்பது சாதீ?

காலங்களின் மாற்றங்கள் பருவ காலங்களை வைத்து கணிப்பாய் இருந்தது 

பள்ளி இறுதி தேர்வு முடிந்து அவரவர் நண்பர்களுடன் வாழ்த்துச் சொல்லி விடை பெற்றுச் செல்லும் நிலையில் சிரிப்பு அழுகையுமாக இருந்தனர் .

கஸ்தூரி சுற்றும் முற்றும் காளையனைத் தேடினாள்,அவன் பக்கத்தில் தான் இருக்கிறான்,

என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிறான்.

காளையா இன்றாவது என்னிடம் பேச வாயேன் உன் குரல் கேட்டாலே போதும் 

நான் உன்னை நினைத்தே என் உயிரை விட்டு விடுவேன், வா....வா...

காளையா என மனக் குமுறலை அடக்கிக் கொண்டு இருந்தாள் கஸ்தூரி,

"கஸ்தூரி யாருக்காக காத்திருக்கே? "

"அது வந்து பிரண்டுக்காக...."

"யாரு பாய் பிரண்டா..."

"அது.....இல்லே...."

"ஏய், சும்மா இருடி கல்லுண்ணி மண்ணியா இருந்திருக்கியேடி 

எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா....

காளையன் உன்னைப் பாக்குறதும் நீ ,ஒரக் கண்ணால் பார்த்து சிரிப்பதும் எனக்குத் தெரியாதுன்னு நினைச்சியா..."

அமரா..சொன்னதைக் கேட்டு, கண்கலங்கினாள்

கஸ்தூரி. 

"ஏய்.. கஸ்தூரி என்னடி எதுக்குடி அழுறே?" கைக்குட்டையால் கண்களை ஒற்றினாள்.

முன்னாடியாவது முன்னும் பின்னும் இருந்தார்கள் இருவரும் பார்ப்பார்கள் சிரித்துக் கொள்வார்கள்.

இப்போ அவன் தூரமா... இருந்து பார்க்கிறான், எனக்கு தெரியவில்லை,

அவன் பார்ப்பது என் தேகத்தின் உணர்வுகள் சிலிர்ப்பதை கண்டு மனம் அல்லல்படுதே!

கஸ்தூரி கஸ்தூரி களையன் உன்னை பார்த்துக் கொண்டு தான் இருக்கிறான் ,

இரண்டொரு நாளில் கண்டிப்பாய் தேடி வருவான்,இப்போ வா....., வீட்டிற்கு போவோம்" என அமரா அழைக்க கஸ்தூரி கண்களில் ஏக்கத்தின் நீரோடை

அலை அலையாய் திரண்டிருந்தது ,

பள்ளி வளாகத்தையே கண்களால் துலாவிக் கொண்டே நடந்தாள் கஸ்தூரி.

கஸ்தூரி மறையும் வரை பார்த்த காளையன் ,

தான் ஒரு கோழையன் அவளிடம் பேச தைரியமில்லாத மடையன் அவளை இனி எப்படி எங்கு பார்ப்பேன்,மனம் இடியாய் குமுறிக் கொண்டிருந்தது 

எப்படியும் அவளைப் பார்த்து பேசனும், இல்லையென்றால்.... கஸ்தூரியை கல்யாணம் செய்து செய்து கொள்ள அவள் அப்பா, அம்மாவைப் பார்த்து பேசனும்,மனதில் உதிர்ந்த எண்ணங்களில் நிலை இல்லாமல் தத்தளித்தான். காளையன்



-நல.ஞானபண்டிதன்