tamilnadu epaper

தமிழ்நாட்டில் ரூ.38ஆயிரம்கோடி சாலைப்பணிகள் தாமதம் ஏன்... மத்திய அமைச்சர் விளக்கம்l

தமிழ்நாட்டில் ரூ.38ஆயிரம்கோடி  சாலைப்பணிகள் தாமதம் ஏன்...  மத்திய அமைச்சர் விளக்கம்l


புதுடெல்லி, மார்ச் 14–

தமிழ்நாட்டில் 1,046.84 கி.மீ தொலைவிற்கு ரூ.38,359.25 கோடி மதிப்பிலான 48 பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும் படிப்படியாக வரும் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நிறைவு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ள்ளது. நிலம் கையகப்படுத்துதல், வனத்துறையின் அனுமதி, மின் இணைப்புகளை இடமாற்றம் செய்தல், நிலப்பரப்புக்கான அனுமதி வழங்குதல், வழக்கத்திற்கு மாறான மழைப்பொழிவு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவு, திட்டமிடல் மற்றும் ஒப்பந்ததாரர்கள் நிதி திரட்டுதலில் ஏற்பட்டுள்ள மந்தநிலை போன்ற காரணங்களால் பணிகள் நிறைவடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

 திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் அதுசார்ந்த நெடுஞ்சாலை அல்லது செயல்திட்டங்களின் அடிப்படையில் மேற்கொள்ளாமல் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசம் / முகமை வாரியாக மேற்கொள்ளப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் ரூ.௭௦௭௬ கோடி செலவிடப்பட்டு, 6735 கோடி செலவிடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் விளக்கினார்.