தாத்தா... பாட்டி...
அப்பா... அம்மா...
அண்ணன்... அக்கா...
தம்பி... தங்கை...
மாமா... அத்தை...
உறவுகள்
கொண்ட வீடு
கோவிலுக்கு... ... ...
இணையானது...
அதில்
குழந்தைகள்
உள்ள வீடு
இறைவன்... ... ...
இருப்பதற்கு
இணையானது...
இரவில்
குழந்தை
யார் அருகில்
உறங்குவது
என்பது
வரம்... ... ...
கிடைப்பதற்கு
இணையானது...
தவம்....
செய்தவர்
யாரோ...?
வரம்...
பெறுபவர்
யாரோ...?
உறங்கும்
குழந்தை
அல்லவா
அதை
முடிவு செய்யும்...!
குழந்தையும்
தெய்வமும்
ஒன்றல்லவா...?
வீட்டில்... ... ...
நேற்று
வரம் பெற்றவர்
யாரோ...
இன்று
வரம் பெறுபவர்
யாரோ...
*ஆறுமுகம் நாகப்பன்*