tamilnadu epaper

தாலி

தாலி


பட..படன்னு வரவும்

அகிலா வாசல் பெருக்கு வதை நிறுத்தி திண்ணையில் அமர்ந்தாள்.

கொஞ்சம் படுத்தா தேவளை போல் இருந்தது அப்படியே திண்ணையிலேயே சாய்ந்தாள் அகிலா

அவளுக்குள் பல சிந்தனைகள் குளித்து பத்து நாள் தான் ஆச்சு அவரும் வெளியூர் வேலைக்கு

போயி இரண்டு வாரமாச்சு கோயில் திருவிழாவிற்கு அம்மா வீட்டிற்கு வந்து ஒரு வாரமாச்சு

இன்னைக்கு திருக்கல்யாணம் எப்படியும் இன்றைக்கு வருவாரு 

"அகிலா அகிலா" என்னடி திண்ணையிலே

படுத்திருக்கே....

அம்மாவின் குரல் கேட்டு கண் விழித்தவள் 

மெதுவா எழுந்தாள் அகிலா

என்னடி செய்யுது 

பட படன்னு வருதும்மா தலை சுத்திர மாதிரி இருக்கும்மா......

எழுந்தா கொஞ்சம் நீச்சத்தண்ணி குடிச்சுட்டு வேலைய பாருன்னு சொன்னா கேட்கிறியா ன்னு சொல்லிக் கொண்டே வீட்டினுள் சென்றாள்.

காலை கதிரவனின் வருகையைப் பார்த்து பறவைகள் கீச் கீச் ஒன்றுடன் ஒன்று தன் அலகால் கொத்திக் கொண்டிருக்க காலை குளுமை காற்று சிலு சிலுன்னு

அகிலாவின் தேகத்தை தழுவிச் செல்ல அவள் கண்களை மூடி தியானத்தில் இருக்க ,

அகிலா இந்தா இதக் குடி செம்பை நீட்ட

கண்களைத் திறந்து அம்மா கொடுத்ததை வாங்கி குடித்தாள்.

குடிக்க குடிக்க குளு குளு ன்னு உப்பு புளிப்பு கலந்த சுவையாய் இருந்த நீராகாரம் அம்மா பக்குவம் வாசல தெளிச்சுட்டு வர்றேன்

நீ?போயி பாத்திரங்கள வெளக்கு ன்னு அம்மா சொல்லவும் வீட்டினுள் சென்றாள் அகிலா.

 பாத்திரங்களை சுத்தம் செய்து வெயில் படும்படி பாத்திரங்களை வைத்து விட்டு வீட்டினுள் வந்தாள் அகிலா 

அகிலா அகிலா அம்மா அழைக்க 

என்னம்மா இப்ப பரவாயில்லம்மா 

மாங்கல்யம் எங்கடி என்று கேட்க அப்போது தான் கழுத்தை தடவிப் பார்த்தாள் தங்கச் செயின் மட்டும் தான் இருந்ததை பார்த்ததும் அகிலா திகில் அடைந்தவளாய் சுற்றும் முற்றும் பார்த்தாள் 

இந்தாடி திண்ணையில் படுத்திருந்தியே தலைமூடியை உதரி கட்டும் போது தாலி தவறி விழுந்திருக்கு அதனை கவனிக்காமல் வீட்டுக்குள்ளே போயிட்டே நா தற்செயலா திரும்பிப் பார்த்தேன் வேறு யாரும் வந்தா எடுத்துட்டு போனா கொடுப்பாங்களா 

தாலியை சட்டைக்குள்ளே போடுடின்னு சொன்னா கேட்க மாட்டிங்கிறியே என்று அம்மா பொரிந்து கொண்டிருக்க அகிலா அழுது கொண்டு இருந்தாள் 

என்னடி என்ன சொன்னேன்னு கண்ணீர் வடிக்கிறே இல்லம்மா அவருக்கு என்னமும் ஆயிருக்குமோ 

அதெல்லாம் ஒன்னும் ஆயிருக்காது வேற மஞ்சக்கயிறு வாங்கி வந்து தாலிய மாத்தி கட்டு இன்னைக்கி மீனாட்சி திருக்கல்யாணம் நானும் போய் தாலிக் கயிற மாத்தனும் பொண்ணுகளுக்கு புருசன்தா முதல்ல மத்ததெல்லாம் அப்புறம் சரி சரி குளிச்சு முடி மஞ்சள் கயிறு வாங்கிட்டு வந்திறேன் ன்னு அம்மா கிளம்ப அகிலா தாலியை கண்களில் ஒற்றியபடி வீட்டினுள் சென்றாள் 



நல.ஞானபண்டிதன் 

திருப்புவனம் புதூர்