நேரம் ஆக ஆக

    துடிப்பு" />

tamilnadu epaper

தேவையா இது

தேவையா இது


    வேலையில் தாமதம்

    சமையலில் கோபம்

    இருப்பதை விட்டு

    பறப்பதற்கு ஆசை ....."


    நேரம் ஆக ஆக

    துடிப்பு உறவுகள்

    நட்புகள் தள்ளி

    வைப்பு ..."


    எல்லாம் மறந்த

    நேரம் சொல்லி

    பயன் இல்லை

    மனம் மாற்றுப்பாதை.... "


    கணவன் மனைவி

    சண்டை சந்தேகம்

    பிறந்த வீடே

    மீளாத கதி...."


    சீரியல் எனும்

    தமிழர் காணாத

    புதிய ஆயுதம்

    குடும்பம் சரியும் ..."


     வேதனையும் 

     சந்தேகமும் மிச்சம்

     இழந்தது கோடி

     நிற்பது தெருக்

     கோடி ....."


     என்று தணியும்

     இந்த மோகம்

     தாகம் நல்ல

     வழி பிறக்க

     வேண்டுவோம் ...."


   - சீர்காழி. ஆர். சீதாராமன்.