tamilnadu epaper

நான் தேவையில்லை !

நான் தேவையில்லை !


காற்றின்றி

குழலில்

கானம் எழாது


துடுப்பின்றி

ஆற்றில்

படகு ஓடாது!


விதையின்றி

விருட்சங்கள்

விளையாது !


சிரிப்பின்றி

முகம்

மலர்ச்சியுறாது!


போட்டியின்றி

வணிகம்

செழிக்காது!


மேகமின்றி

மழையும்

பொழியாது!


மின்னலின்றி

இடியும்…

இடிக்காது!



எல்லாவற்றுக்கும்

ஏதாவது ஒரு

துணை வேண்டும்


நான் யார் என்றே

அறிந்திட

”நான்” தேவையில்லை....


கவிஞர் பாலசந்தர்

மண்ணச்சநல்லூர்