கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த நாப்பிராம்பட்டி கிராமத்தில் அருள்மிகு பாப்பார மாரியம்மன் கோவிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.விடியற்காலை 5மணி அளவில் யாக பூஜை நடைபெற்றது .அதனைத் தொடர்ந்து காலை ஏழு மணி அளவில் விமான கோபுர கலசத்தின் மேல் புண்ணிய தீர்த்தம் தெளிக்கப்பட்டது. மேலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. அனைத்து பக்தர்களுக்கும் பாப்பார மாரியம்மன் அருள் பாலித்தன.