tamilnadu epaper

பிட்டுக்கு மண்சுமந்து

பிட்டுக்கு மண்சுமந்து

சிவனே தொழிலாளியாக வந்து பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டது மதுரை திருவிளையாடல் புராணத்தில் படித்திருக்கிறோம்.


ஆனால் இதனைவிட தொழிலாளி எனத் தமிழன் அவனுக்குக் கொடுத்த சிறப்பு வியப்பை அளிக்கிறது.


தமிழுக்கே சிறப்பு ல ள ழ


"அத்தனை ஜீவராசிகளிலும் சிறந்தவனே உழைக்கின்ற வர்க்கமாகிய தொழிலாளி"அல்லவோ!"


அவனுக்கு அச் சிறப்பை எப்படிக் கொடுத்திருக்கிறான் தமிழன் பாருங்களேன்.


மூன்று ல ள ழ கரங்களும் ஒன்றாகி ஒரே சொல்லாய் அமைத்து அவனுக்குச் சிறப்பைத் தருவது போல்...


எந்த மொழியிலும் இல்லாத சிறப்பாய் தமிழில் மகுடம் வைத்தால் போல் இதனை நினைக்கின்றேன்


ஆண்டவன் உலகத்தில் முதலாளி அவனுக்கு நாம் எல்லாம் தொழிலாளி


இல்லை அவனே தொழிலாளியின் சிறப்பில் தன்னை மகிழ்ந்தவன் அல்லவா..


முதலாளிக்கு இரு ல ள வைக்கொடுத்தவன் தொழிலாளிக்கு மூன்று சிறப்பு எழுத்துக்களையும் கொடுத்து சிறப்பித்திருக்கான் தமிழன்.


நீங்க நல்லா இருக்கோணூம் நாடு முன்னேற நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற..


உழைக்கும் வர்க்கங்களே ஒன்று கூடுங்கள்...


மே தின தொழிலாளி சிறப்பு தின வாழ்த்துகள்....


-பானுமதி நாச்சியார்