சரி... தங்கச்சி... நான் கிளம்பறேன்" சொல்லியபடி தெருவில் இறங்கி தன் பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்த தாய்மாமன் அரசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்த ரகு, 


 " />

tamilnadu epaper

தாய் மாமன்

தாய் மாமன்


  "சரி... தங்கச்சி... நான் கிளம்பறேன்" சொல்லியபடி தெருவில் இறங்கி தன் பைக்கை ஸ்டார்ட் செய்து பறந்த தாய்மாமன் அரசுவை வைத்த கண் வாங்காமல் பார்த்த ரகு, 


  "அம்மா உங்க அண்ணனை மாதிரி ஒரு கஞ்சனை நான் பார்த்ததே இல்லையம்மா... 50 ஆயிரம் ரூபாய்க்கு பைக் வாங்கிட்டாரு... ஒரு அம்பது ரூபா செருப்பு வாங்கிப் போட மாட்டாரா?.. நானும் பாத்துட்டேன் கல்யாணம்... காட்சி... திருவிழா... பண்டிகை...ன்னு எங்க போனாலும் செருப்பே இல்லாமல் வெறுங் காலோடு வர்றாரு.... போறாரு!"


மகன் சொன்னதைக் கேட்டு லட்சுமியின் விழியோரம் கண்ணீர்.


 "அய்யய்ய நான் என்ன கேட்டுட்டேன்னு அழறே?"


  "டேய் அவர் வெறும் காலோட நடந்து போறது உங்களுக்கு சிரிப்பைத் தரலாம்... ஆனா எனக்கு அழுகையைத்தான் தரும்... ஏன்னா ஒரு 40 வருஷத்துக்கு முன்னாடி... அப்ப எனக்கு 14 வயசு... எங்க அண்ணனுக்கு 20 வயசு"


(ஃப்ளாஷ் பேக் ஆரம்பம்)


தனது சைக்கிளை எடுக்கப் போன அரசு அது பஞ்சராகி நிற்பதைப் பார்த்துக் கத்தினான், "யாரு... யாரு என் சைக்கிளை எடுத்து ஓட்டினது?"


 "அண்ணே... நான்தான் ஓட்டிப் பழகலாம்னு எடுத்தேன்!" லட்சுமி சொல்ல

.

 "இது என் சைக்கிள்... இதை ஏன் நீ எடுத்தே?"


 "அய்ய... அதுல உன் பேர் எழுதி வெச்சிருக்கா என்ன?"


  "ஏய்.... என்னடி வாய் நீளுது?... இதுக்கு மேல பேசினே செருப்பால அடிப்பேன்"


  "டேய் நீ ஆம்பளையா இருந்தா அடிடா பார்க்கலாம்!"


  லட்சுமி அப்படிப் பேசியதில் ஆக்ரோஷமான அரசு, ஓடிப் போய் உண்மையாகவே செருப்பை எடுத்து வந்து தங்கை லட்சுமியை அடித்தே விட,


 அதை நேரில் கண்ட தாயார் உறைந்து போய் நின்றாள்.


  "அடேய் வெள்ளிக்கிழமை நாளும் அதுவுமா.... நம்ம வீட்டு லட்சுமியை செருப்பால் அடிச்சிட்டியேடா!... இந்தப் பாவம் உன்னைச் சும்மா விடுமாடா?" தாயார் மகனைப் பார்த்துக் கத்த,


அழுது கொண்டே அறைக்குள் சென்று கதவைத் தாழிட்டுக் கொண்டு அழுது தீர்த்தாள் லட்சுமி. 


  அதன் தொடர்ச்சியாய், தொடர்ந்து இரண்டு நாட்கள் பட்டினியாய்க் கிடந்த லட்சுமியை பார்த்து மனம் தாளாத அரசு நேரில் அவளைச் சமாதானப்படுத்தி மன்னிப்புக் கேட்டான். அப்போதும் அவள் சமாதானமாகாமல் போக,


  "சரி தங்கச்சி... நான் செஞ்ச நட்புக்கு தண்டனையா இனிமேல் வாழ்நாள் பூராவும் நான் சிரிப்பே போடாமல் வாழப் போறேன் இது உன் மேல் சத்தியம்"


*******

  தாய் சொன்ன பழைய கதையைக் கேட்டு நெகிழ்ந்து போனான் ரகு.


   அடுத்த மாதத்தில் ஒரு நாள் விதியின் விளையாட்டாய் தாய்மாமன் அரசு மாரடைப்பால் இறந்து போக, 


   சவமாய்க் கிடந்த தன் தாய்மாமனின் கால்களுக்கு கண்ணீரோடு புதுச் செருப்பு அணிவித்து அழகு பார்த்தான் ரகு.


(முற்றும்)

முகில் தினகரன், கோயமுத்தூர்.