அறிவுப் பெட்டகத்தின் பேராற்றல் புத்தகம்
அகரம் இன்றி
காவியமும் காப்பியமும் ஏது?
ஓலைச்சுவடியை புத்தகமாக பரிமாற்றம் செய்திங்கு படிக்கிறோம்
எத்தனை இலக்கியம் இலக்கணம்
புத்தகத்திலே...
படிப்பின்றி அறிவாற்றல்
பெருகிடுமா உரைப்பீரே
எழுத்தின்றி எதுவுமில்லை
பண்பாடும் அறிவதில்லை
எழுதுகோலின் முனையால் தீட்டியவை யாவும் பொக்கிசமே
நன்னெறி அறிந்தோம்
நல்லொழுக்கம் கற்றோம்
புத்தியில் புகுத்தியே
புத்துணர்ச்சி அடைந்தோம்
*புத்தகம் ஓர் ஆயுதமா ?*
ஐயம் வேண்டாம்
ஐக்கியமாவோம் அதனுள்ளே
எண்ணற்ற கருத்துகள்
வாழ்வது சீராகிடவே
அறிவியல் உண்மைகளை எடுத்தியம்பும் கட்டுரைகள்
கவிஞனின் கற்பனை ஊற்றெடுக்கும்
உன்னதம்
கல்வியே சிறந்த செல்வம் உணர்ந்திடு
கண்ணின் இமைபோல் நாளும் காத்திடும்
கற்றவனை மதித்து அவனை போற்றுவோம்
எழுத்தறிவு தந்திட்ட
ஆசானை வணங்கிடுவோம்
*புத்தகம் ஓர் ஆயுதமா?*
ஆம் என்றே உரைத்திடுவோம் இக்கணமே...
கவிஞர்
-பெ.வெங்கட லட்சுமி காந்தன் விருதுநகர்