எல்லாம்" />
காதல் என்கிற மலர் விரிந்ததும் வண்டுகள் தேன் எடுக்க வட்டம் அடிப்பது போல ....." எல்லாம் மறந்து புதிய உறவு ஒன்றே நிரந்தரம் அடைக்கலம் என்று துடிக்கும் இதயம் .... " கண்கள் தேடும் நேரம் உதடுகள் துடிக்கும் நிமிடங்கள் விழிகள் காட்டும் நொடிப் பொழுது ஜாலங்கள் ......" கை விரல்கள் காட்டும் அபிநயம் உடல் காட்டும் யோகாசனம் எத்தனையோ மின்னல் அசைவுகள் ...." இரு இதயம் பட படக்கும் உணர்வுக் காவியம் உயிர் ஓவியம் ...." வார்த்தைகள் வெளிப்படாமல் மௌனம் விளையாடும் மைதானம் காதல் ....." சுதந்திரப் பறவைகள் புதிய பாதையை கூட்டைத் தேடும் வித்தைகள் விந்தைகள் ....." காதல் எனும் கல்வி மொழி உறவு சமுதாயம் எல்லாவற்றிக்கும் அப்பாற்பட்டது ...." - சீர்காழி. ஆர். சீதாராமன். Breaking News:
காதல் என்ற மலர்