நமது தேசம்
நமக்குப் பெருமை.
ஆப்ரேஷன் சிந்தூர்
அதிரடியால்
தீவிரவாத முகாம்கள் அழிப்பு.
தீவிரவாதிகள் பலர் ஒழிப்பு.
தேசத்தின் பாதுகாப்பில்,
கட்டமைப்பில்,
உறுதியுடன் துணை நிற்போம்.
நமக்கு ஈடு இணையில்லை என
உரக்கச் சொல்வோம்
உலகிற்கு.
நாட்டாமைகள்
அவசியமில்லை நமக்கு
பாதுகாப்பில்
சமரசமே கூடாது.
அமைதி
நமது பெருமைதான்
சிறுமைக்கு
இடம் தரவே கூடாதே!
வான்வழிப் போரில்
சர்வதேச ஊடகங்களின் சர்ச்சைகளை
கண்டும் காணாமலும்
கடக்க கூடாது.
பாதுகாப்பு பலப்படுத்திய உறுதியை வெளிப்படுத்தி
முறியடிப்போம்.
அந்நிய நாடுகளின்
அனாவசிய தலையீடு
அவசியமில்லை.
பொருளாதார இழைப்பை ஈடு செய்வோம்.
மறு சீரமைப்பில்
வந்துட்டேன்னு சொல்லி
திருப்பி அடிப்போம்.
நமது பஞ்ச சீலத்தை
பொதுவாக்கி
பின்பற்ற செய்திடுவோம்
உலகை.
தொலைநோக்கு பார்வையில்
இனியொரு
புதியதோர் விதி செய்வோம்.
அதை
எந்த நாளும் காப்போம்.
-எறும்பூர் கை. செல்வகுமார், செய்யாறு.