tamilnadu epaper

எல்லாம் சில காலம்

எல்லாம் சில காலம்


 எல்லாம் சில காலம் இருப்பதும் சில காலம் எதுவும் நிரந்தர

மில்லை மாற்றம் மாற்றம் ஏமாற்றம் என்பது பின் தெரியும்



 எல்லாம் சில காலம் என்பது எப்போதும் மாறும் தடுமாறும் முன்னேற்றம் என போகிறான் அது ஏமாற்றமாய் முடிகிறது.


 காலம் எரிந்து கொண்டிருக்கும் கொள்ளி எந்த நேரம் தொட்டா

 லும் சுடும் தனல் ஏமாறாதே

 எல்லாம் சில காலம் தான்


 குழந்தை சிறுவர் காளையர் சிறுமிகள் கன்னியர் நங்கை சகோதரிகள் சகோதரர்கள் தாய் தகப்பன் தாத்தா பாட்டி யாவும்


 எல்லாம் கொஞ்சி குலவுதலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமும் எல்லாம் சில காலமே தான்

  எல்லோரும் அறிந்த உண்மை



 கவலை கண்ணீர் கம்பளை வேதனை சோதனை பசி பட்டினி பஞ்சம் தாகம் வறட்சியும் பின் பிணிகளும் வலிகளும்


  இளவேனில் கோடை குளிர் கூதிர் பனி கார் எல்லாம் சில காலம் இங்கு நிரந்தரம் எதுவும் இல்லை என்பதைஅறிவோம்


-பேராசிரியர்

முனைவர் வேலாயுதம் பெரியசாமி

சேலம்