tamilnadu epaper

வேறு என்ன செய்ய...

வேறு என்ன செய்ய...


ஒரு போதும்

மக்கள் 

பொறுத்துக் கொள்ள 

மாட்டார்கள்...


தனிமனினாய்

தனி ஒருவனிடம்

கொள்ளை

அடிப்பதை...


கட்சி

வளர்த்து

தானும்

வளர்ந்து

கூட்டு

சேர்ந்து

கூட்டணி

அமைத்து...


நாட்டின் 

பொது சொத்து பத்துக்களை

மொத்தமாய்

கொள்ளை

அடித்தால்...


பொறுத்துக்

கொள்வார்கள் 

ஐந்து

வருடங்களுக்கு...


முடிவு செய்து

விட்டீர்களா

எப்படி 

கொள்ளை

அடிக்கலாம் 

என்று...


பொறுத்துக்

கொள்ள

முடியவில்லை 

பொங்கி

எழுந்து விட்டேன்


கவிதையை

முடித்து விட்டேன்

வேறு

என்னதான்

நான் 

செய்வது...?


-ஆறுமுகம் நாகப்பன்