14/03/2025 நேற்று மாலை 6 மணியளவில் தமுமுகவின் அயலக அமைப்பான இந்தியன் வெல்ஃபேர் ஃபோரம் (IWF) யான்பு மண்டல இஃப்தார் நிகழ்ச்சி யான்பு பலத் அல் ஹிக்கி ஓட்டலில் மவ்லவி ஹாதில் ஹக் அவர்களின் கிராஅத்தோடு மண்டல தலைவர் பந்தநல்லூர் சாஜஹான், தலைமையில் நடைப்பெற்றது இதில் மண்டல செயலாளர் உடன்குடி அபுபக்கர் சித்தீக், துணைத் தலைவர் ஏர்வாடி அன்சாரி, ஆகியோரின் முன்னிலைவகித்தனர்
நிகழ்ச்சியில்
மண்டல IWF பொருளாளர் பாளை அனீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.
மண்டல மமக செயலாளர் அடியற்கை சேக்தாவுது நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கினார்.
டயோட்டா கிளை தலைவர் கட்டிமேடு அன்புதீன் மண்டல செயல்பாடுகளை எடுத்துரைத்தார்.
ஜித்தாவிலிருந்து வருகை புரிந்த மவ்லவி. முஹம்மது ரியாசுதீன் அஜிஸி அவர்கள் ரமலான் பண்புகள் ஆயுள்வரை தொடரட்டும் என்ற தலைப்பில் சிறப்புரை நிகழ்த்தினார்.
இஃப்தார் நிகழ்ச்சிக்கு வருகைப்புரிந்த ஜித்தா மற்றும் மதினா மண்டல நிர்வாகிகளுக்கும், சிறப்புரையாற்றிய மவ்லவிகளுக்கும் நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டன.
ராயல் கமிசன் கிளைத் தலைவர் வாசுதேவநல்லூர் சம்சுதீன் அவர்களின் நன்றியுரையோடு நிகழ்ச்சி முடிவுற்றது. இந்நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய தமிழ் சொந்தங்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை பலத் கிளை நிவாகிகள் ஷாஜஹான் , இமாம் நியாஸ், டொயோட்டோ கிளை இலியாஸ், ஜியாவுல் ஹக் , எல் சுவைதி கிளை வாஜித், ரபீக் ராயல் கமிஷன் கிளை ஜவஹர் அலி, இர்ஷாத் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர் அல்ஹமதுல்லாஹ்
என்றும் சமுகப்பணியில்
IWF யான்பு மண்டலம்
சவூதி அரேபியா