மணமேல்குடி ஏப்30
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடியில் 63 நாயன்மார்களும் ஒருவரான குலச்சிறை நாயனார் வணங்கிய சிவஸ்தலமான ஜெகதீஸ்வரர் ஆலய சித்ரா பௌர்ணமி விழா துவங்கியது.
விழாவின் துவக்க நாளான நேற்று காப்பு கட்டுதல் விழா கொடியேற்றுதலுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
முதல்நாள் சர்வமான்ய ஐயர்கள் மண்டகப்படியை முன்னிட்டு முருகப்பெருமான் வள்ளிதேவயானையுடன் வினாயகரை வழிபடும் தோற்றத்தில் காட்சியளித்து அருள்பாலித்த காட்சி பக்தர்களை பரவசப்படுத்தியது.
13 நாட்களில் நடைபெறும் இந்த திருவிழாவில் தினமும் முருகப்பெருமான் ஒவ்வொரு அலங்காரத்தில் தோற்றமளித்து அருள்பாலிப்பார்.பதிமூன்றாம் நாளான சித்ரா பௌர்ணமி நாளன்று பால்குடம் ,காவடி எடுப்பு நிகழ்ச்சியும் அதை தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியும் நடைபெறும். அன்று இரவு 9 மணிக்கு முருகப்பெருமான் வள்ளி தெய்வானை யுடன் திருவீதியுலா நிகழ்ச்சி வெகுசிறப்பாக வாணவேடிக்கையுடன் நடைபெறும்.
விழாவிற்கான ஏற்பாடுகளை விழாகுழுவினர்களான உறவின்முறை தலைவர் சந்திரமோகன் ,அறங்காவலர் சாமியப்பன் மற்றும் சிவகுருநாதன்,முத்து , ரமேஷ்,ஜெயக்குமார் ,உதயகுமார் உள்ளிட்ட பலரும் ஏற்பாடு செய்திருந்தனர்.