" இல்லீங்க, அவன் வெள்ளென கிளம்பி எங்கேயோ போயிட்டான்!"

 

" அவன் நம்ம மவன் மாதிரியா நடந்துக்கிறான்..வெட்டி ஆபிஸர்" />

tamilnadu epaper

மதிப்பு

மதிப்பு

ஏன்டி!..இன்னிக்கு 'காங்கேயன் பேட்டை' மாரியம்மன் கோயில் போகுணுமே 

செந்திலுக்கிட்ட ஆட்டோ அனுப்பிவிடச்சொன்னியா?"

 

" இல்லீங்க, அவன் வெள்ளென கிளம்பி எங்கேயோ போயிட்டான்!"

 

" அவன் நம்ம மவன் மாதிரியா நடந்துக்கிறான்..வெட்டி ஆபிஸர் ஏதோ முறைச்சிக்கிட்டுள்ளப்

போறான்."

 

" வேலை வெட்டிக்குத்தான் போறதில்ல...அவனுக்கு வீட்டு வேலையாவது பார்க்கலாமுன்னு தோனுதா?.

அதுக்கும் லாயக்கில்ல.."

 

" அட, நமக்கு இருக்கிறது ஒரே மவன் அவனையும் ஏன் கரிச்சுக்கொட்டுறீங்க?..உங்களுக்கு என்ன வேணும்.. ஆட்டோதானே?..ஆட்டோக்காரர் நம்பர் ஒன்னு அதோ அந்த மாதக் காலண்டருள்ள எழுதி வச்சிருக்கேன் ..போய் பார்த்து போனைப்போடுங்க!"

 

" இப்படியே அவன விட்டுக்கொடுக்காம பேசி கெடுத்து

வச்சிருக்கே..நடத்து.."

 

"ஹலோ..ஆட்டோவா?..

தோப்புத்தெரு வரீங்களா?"

 

" எந்த வீடு சார்?.."

 

"..டாக்டர் வீட்டுக்கு பக்கத்துல நாலாம் நம்பர் வீடு! "

 

" நாலு டாக்டர் இருக்காங்க எந்த டாக்டர் வீட்டுக்கு பக்கத்துலன்னு சொல்லுங்க?"

 

"கணேசமூர்த்தி டாக்டர் வீட்டுக்கு எதிர் வீடுங்க!"

 

" அட, நம்ம 'சமூக ஆர்வலர்' செந்தில் சார் வீடுன்னு சொல்லுங்க!..இதோ வரேங்க!"

 

"அட, நம்ம பயலுக்கு வெளியில மதிப்பு இருக்கும்போல.. "என்று அதிர்ந்து உள்ளூர மகிழ்ந்து நின்றார் செந்திலப்பா.

 

   -- அய்யாறு ச.புகழேந்தி