மறையும் மேகங்கள் எல்லாம் கருமையாகியிட
மயிலும் அதற்கேற்றாற்போல் நடனமாடிட
மனிதர்களின் சப்தம் செவியில் விழுந்திட
மண்வாசனை நாசியில் நுழைந்து சென்றிட
மழைச்சாரலும் சன்னலோடு வந்து பேசிட
மண்ணில் விழுந்து முதல் தூறல்
மண்ணோடு பேசிக்கொண்டு மனதோடு உறவாடின
மழையினை இரசித்து உள்ளம் குளிர்கிறது
மழை பெய்திட தனிமை அழகானது
மனதோடு ஒட்டிக்கொண்டது போல
மனதோடு மழைக்காலம் மனதிற்குள் சுகமாய்
மழைவிட்ட பிறகும் மறையாத தூவானம்
மனதை பறித்து செல்கிறது மழைக்காலம்
.....
செ.முருகேசன்
இராசிபுரம்